Thursday, March 4, 2010

ரஞ்சிதா-நித்யா...லிங்க் கொடுத்த தயாரிப்பாளர்!! வியாழக்கிழமை, மார்ச் 4, 2010, 12:12[IST]

நடிகை ரஞ்சிதாவுக்கும் நித்யானந்த சாமியாருக்கும் இடையே லிங்க் கொடுத்தவர் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தயாரிப்பாளர் பார்க்க அடக்கமாகத் தெரிபவர். இசைஞானி போன்றவர்களிடம் நல்ல பெயர் பெறுமளவு 'நடிப்புத் திறமை' கொண்டவர்.

'மதரின்' பெயரில் இவர் தயாரித்த படத்தில் மட்டும்தான் மரியாதை இருந்தது... ஆனால் இவர் செய்த காரியங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து இவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் சிதைத்துவிட்டது.

இவர்தான் சாமியாரிடம் ரஞ்சிதாவை நேரடியாக அழைத்துப் போனாராம்.

நடிகையின் தனிப்பட்ட விவகாரங்களும் தயாரிப்பாளருக்கு அத்துபடி. அதேபோல சாமியாருக்கும் இவர் மிகமிக நெருக்கமானவராம். அவரது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதே இவரது கடமையாக இருந்திருக்கிறது. ரஞ்சிதாவின் மனக்காயத்துக்கு மருந்தாக சாமியாருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இந்தத் தயாரிப்பாளர். அதற்கு பதில் வெகுமானமும் அவருக்கு நிறையவே கிடைத்துள்ளது!

ரஞ்சிதாவைப் போலவே இன்னும் சில கவர்ச்சிகரமான, ஆனால் முன்னாள் கனவுக் கன்னிகளாக மாறிப்போன (அதாவது அந்த தயாரிப்பாளர் காலத்தில் முன்னணியில் இருந்தவர்கள்) சில நடிகைகளை சாமியாருடன் கோர்த்துவிட்டதில் தயாரிப்பாளரின் ரோல் அபாரமாம்!

No comments:

Post a Comment