Monday, March 8, 2010

நித்தியானந்தா கும்பமேளாவில் உள்ளார்-ஆசிரம நிர்வாகிகள் திங்கள்கிழமை, மார்ச் 8, 2010, 14:59[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/08/nithyananda-kumbmela-says-ashram.html


பெங்களூர்: நடிகை ரஞ்சிதா- நித்தியானந்தா வீடியோ விவகாரம் குறித்து இரண்டொரு நாட்களில் முழுமையான விளக்கத்தை தருவோம் என பெங்களூரில் உள்ள பிடாதி நித்தியானந்த தியான பீட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நித்தியானந்தா விரைவில் பக்தர்கள் முன் உண்மைகளை விளக்குவார் என்றும் அவர்கள் கூறினர்.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா படுக்கை அறையில் சல்லாபம் செய்த வீடியோ கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஆசிரமத்தைச் சேர்ந்த பிரேமானந்தா என்ற லெனின் சென்னை போலீசாரிடம் மேலும் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகார்களை அளித்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாயமாக இருந்த சாமியார் நித்தியானந்தா, நேற்று திடீரென ஒரு தன்னிலை விளக்க வீடியோவை வக்கீல் மூலமாக வெளியிட்டார்.

தான் சட்டத்துக்கு புறம்பாக எந்த காரியத்திலும் ஈடுபடவில்லை என நித்தியானந்தா வீடியோவில் கூறியிருந்தார். ஆனால், ரஞ்சிதா பற்றியோ செக்ஸ் குற்றச்சாட்டு குறித்தோ அவர் எதையும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தின் மூத்த நிர்வாகி நித்ய சச்சிதானந்தா உள்ளிட்ட ஆஸ்ரம பொறுப்பாளர்கள் இன்று நிருபர்களை சந்தித்தனர்.

நித்தியானந்தா தற்போது உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும், அடுத்த இரண்டொரு நாட்களில் மக்கள் முன் உண்மைகளை விளக்குவார் என்றும் சச்சிதானந்தா தெரிவித்தார்.

ஆனால், ரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சச்சிதானந்தா பதில் அளிக்கையில்,

நித்தியானந்தா மீது குற்றச்சாட்டுகளை கூறும் லெலினுக்கு ஆஸ்ரமத்தின் அனைத்து மூத்த நிர்வாகிகளையும் தெரியும். அவர்களின் மின் அஞ்சல் போன்ற அத்தனை தொடர்பு வழிகளும் தெரியும்.

வீடியோ கேமரா, சாட்டிலைட் சேனல் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து நாங்கள் எந்த வித முடிவுக்கும் வர முடியாது.

இந்த புகாரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நாங்கள் சிந்திக்க முடியாது. தற்போது கும்பமேளாவில் உள்ள நித்தியானந்தா, இரண்டொரு நாட்களில் வந்த பின்னர் இவை அனைத்துக்கும் விடை கிடைக்கும்.

மேலும், தியான பீடத்திற்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை. அனைத்து ஆவணங்களும் சட்டப்படி உள்ளன என்றார்

No comments:

Post a Comment