Saturday, March 6, 2010

டிசம்பரில் எடுக்கப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ

http://thatstamil.oneindia.in/news/2010/03/06/lenin-karuppan-submits-more-cds.html

சென்னை: நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா லீலைகளை படம் பிடித்தவர் அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோவை கடந்த டிசம்பர் மாதம் எடுத்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின், சாமியாரின் உல்லாசங்கள் அடங்கிய சிடிக்களை அவர் கொடுத்தார். மேலும் சாமியாரால் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த பல அந்தரங்கத் தகவல்களையும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2006ம் ஆண்டு முதல் பெங்களூர் நித்யானந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தேன். ஆசிரமத்திற்கு வரும் அப்பாவி பெண்களை தான் கிருஷ்ணர் அவதாரம் என்று கூறிக் கொண்டும், அவர்களை கோபியர் என்று கூறிக் கொண்டும் நித்யானந்தா கட்டிப்பிடிப்பார்.

நடிகை ரஞ்சிதாவிடம் அவர் அடிக்கடி உல்லாசமாக இருப்பதை பார்த்தேன். அப்போது தான் நான் உள்பட எல்லா பக்தர்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றும் நித்யானந்தாவின் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் ரஞ்சிதாவிடம் உல்லாசமாக இருப்பதை படம் எடுத்தேன்.

இது எப்படியோ நித்யானந்தாவுக்குத் தெரிந்துவிட்டது. சேலம், சீரகப்பாடியில் புது ஆசிரமம் திறப்பு விழாவிற்கு வந்தபோது என்னை அவருடைய வேனுக்குள் அழைத்து, நீ ஆசிரமத்தில் படம் ஏதாவது எடுத்தாயா? என்று கேட்டு மிரட்டினார். உன்னை கொலை செய்து விடுவேன் என்று அவரும் அவருடன் இருந்த சீடர்களும் மிரட்டினர்.

அப்போது அவர்களிடமிருந்து சமயோஜிதமாக தப்பிவிட்டேன். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லெனினுக்கு போலீ்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரது பெயர் முதலில் பிரேமானந்தா என்று கூறப்பட்டது. ஆனால், தனது பெயர் லெனி்ன் கருப்பன் என்ற நித்யதர்மானந்தா என்று போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம ஆத்தூரைச் சேர்ந்த இவர் நித்யானந்தாவுக்கு உதவியாளராகவும் டிரைவராகவும் சீடராகவும் இருந்தவர் ஆவார்.

ரஞ்சிதாவுடனான உல்லாசக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதையடுத்து இதை லெனின் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என்று நித்யானந்தா தரப்பு புகார் [^] கூறியது நினைவுகூறத்தக்கது.

இந்த வீடியோவையே ரஞ்சிதா தான் தனது ஏற்பாட்டில் எடுத்ததாகவும் முதலில் கூறப்பட்டது. இது உண்மையா இல்லையா என்பது லெனினை முழுமையாக விசாரித்தால் தான் தெரியவரும்.

No comments:

Post a Comment