Tuesday, June 29, 2010

வீடியோவில் இருப்பது நான்தான்-என்னை மீண்டும் காயப்படுத்தாதீர் : ரஞ்சிதா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப… on 29-06-2

http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=19878&lang=ta&Itemid=5
Published in : செய்திகள், தமிழகம்

வீடியோவில் இருப்பது நான்தான்-என்னை மீண்டும் காயப்படுத்தாதீர் : நடிகை ரஞ்சிதா - நித்யானந்தா வீடியோ புகழ் ரஞ்சிதா தலைமறைவாக இருந்தார். போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தனது சகோதரருடன் அமெரிக்காவில் இருக்கிறார் என்றும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.Image

இன்னும் சில பத்திரிகைகள் ரஞ்சிதா, நித்யானந்தாவின் ஆசிரமத்திலேயே தலைமறைவாக இருக்கிறார் என்றும், வீடியோ எடுத்த விவகாரத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றும், பின்னர் அவ்வீடியோவை நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் என்றும், பிறகு, தானும் ரஞ்சிதாவும் சேர்ந்து சாமியாரிடம் பணம் கறப்பதற்காகவே அந்த வீடியோவை எடுத்தோம் என லெனின் கருப்பனே ஒத்துக்கொண்டதாகவும், இந்த வீடியோ விவகாரத்தில் நித்யானந்தா எந்த வித சட்ட விரோதச் செயல்களையும் செய்யவில்லையெனவும், வீடியோ விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் உண்மையை உலகுக்கு சொல்வேன் என்றும் சாமியார் தனது விளக்கத்தில் கூறி விட்டார் பல்வேறுபட்ட செய்திகள் வந்தன. இந்நிலையில் ரஞ்சிதா, தற்போது திடீரென ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், நித்யானந்தாவுடன் வீடியோவில் இருந்தது நான்தான். நான் நித்யானந்தாவின் தீவிர பக்தையென்பது அனைவருக்கும் தெரிந்ததே. என்னை அவமானப்படுத்தவும், சுவாமி நித்யானந்தாவின் வளர்ச்சியில் களங்கம் ஏற்படுத்தவுமே இத்தனை நாடகங்களும் அரங்கேறியுள்ளன.Image

நான் ஒரு காலத்தில் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவள். என்னுடைய வளர்ச்சிக்கு பிரதான காரணம் மீடியாக்கள்தான். ஆனால் அதே மீடியாக்கள்தான் என்னை இவ்வளவு அவமானத்திற்கும் உள்ளாக்கியுள்ளன. என்னை வளர்த்துவிட்ட மீடியாக்களே இவ்வளவு கேவலப்படுத்தியது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்துப்பெண். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நானே எடுத்ததுபோல மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. நான் என் சிறு வயதிலிருந்தே மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தேன். அதனை ஒரே நாளில் நித்யானந்தா குணப்படுத்தினார். அதனால் அவருக்குப் பணிவிடை செய்து, அவரது தீவிர பக்தையானேன். அவருடைய கருத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும் கவரப்பட்டு அவருக்கு பணிவிடை செய்யும் பொருட்டு மாத்திரை கொடுப்பதும், உணவு கொடுப்பதும் எனது சேவைகளாக இருந்தன. ஆனால், இதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு என்னை அவமானப்படுத்திவிட்டனர். நித்யானந்தா மகா ஞானி, அவரே இன்னும் சில வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிவிப்பார். இதுவரை என்னைப் புண்படுத்தியது போதும், தயவு செய்து இனிமேலாவது மீடியாக்கள் என்னை தொடர்ந்து காயப்படுத்தாமல் விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last update : 29-06-2010 22:06

No comments:

Post a Comment