Thursday, September 30, 2010

நித்யானந்தா வழக்கு ஒத்திவைப்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95911


பெங்களூரு : தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை  ரத்து செய்ய வேண்டும்' என, சாமியார் நித்யானந்தா தொடர்ந்த வழக்கு, அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பல்வேறு வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் கிடையாது. இந்து மதத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே, என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என, கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல், வழக்கின் ஆதாரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வாதிட்டார். வாதத்துக்கு பின்னர், இந்த வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், சாமியார் நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் கோர்ட்டில் அக்டோபர் 28ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.


No comments:

Post a Comment