Tuesday, December 21, 2010

கோர்ட்டில் நித்யானந்தா !!!!!!!!!!!, Nithya’s disciple attacks mediapersons

பெங்களூரு : சாமியார் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜரான போது, பத்திரிகையாளர்களுக்கும், சீடர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பாலியல் புகாரில் கைதாகி ஜாமீனில் இருக்கும் சாமியார் நித்யானந்தா மீது, சி.ஜ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், சாமியார் நித்யானந்தா கோர்ட்டில் நேரில் ஆஜராகாமல், தனது வக்கீல் மூலம் பதிலளித்து வந்தார்.

இவ்வழக்கு விசாரித்து வரும் ராமநகர் நீதிமன்றம், சாமியார் நித்யானந்தா, அவருடன் கைதாகி ஜாமீனில் இருக்கும் அவரது சீடர் நித்ய பக்தானந்தா, மேலும் இவ்வழக்கில் பாலியல் ஒப்பந்தங்களை அளித்ததாக கூறி கைதாகி ஜாமீனில் இருக்கும் சச்சிதானந்தா ஆகியோர் 16ம் தேதி(நேற்று) கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இந்த வழக்கின் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்படாமல் உள்ள சச்சிதானந்தாவின் மனைவியும், ஆசிரம செயலர்களில் ஒருவரான மா சச்சிதானந்தா (எ) ராகினி, மற்றொறு செயலர் சதானந்தா (எ) தனசேகரன் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. சி.ஐ.டி., தரப்பில், இவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாக புகார் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் நேற்று கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜராவார் என்று ஏராளமான பத்திரிகையாளர்களும், "டிவி' கேமராமேன்களும் குவிந்திருந்தனர். வழக்கத்திற்கு அதிகமாக கோர்ட் பரபரப்பாக காணப்பட்டதால், பொதுமக்களும் வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர்.

காலை 11.45 மணிக்கு சாமியார் நித்யானந்தா, அவரது சீடர் பக்தானந்தா, ஆசிரம செயலர் சச்சிதானந்தா ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக காரில் வந்தனர். அவர்களை தொடந்து பல வாகனங்களில் அவரது சீடர்களும் வந்தனர். சாமியார் வந்த கார், கோர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. அவரது சீடர்கள் கோர்ட்டிற்குள் சென்று, சாமியார் உள்ளே வரலாமா என விசாரித்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஒரு தனியார் "டிவி' கேமராமேன், சாமியாரை படம் எடுப்பதற்காக, அவரது கார் கண்ணாடியை தட்டினார். இதனால், ஆத்திரமடைந்த சீடர்களுக்கும், கேமராமேனுக்கும் தகராறு ஏற்பட்டது.

அதை தொடந்து, அங்கிருந்த மற்ற நிருபர்கள், சீடரையும், நித்யானந்தாவையும் எதிர்த்து கோஷமிட்டனர். இதனால், சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார் நித்யானந்தா, அவரது சீடர் பக்தானந்தா, சச்சிதானந்தா ஆகியோர் நீதிபதி புஷ்பவதி முன்பு ஆஜராயினர். சாமியார் தரப்பு வக்கீல், ""பிடதி ஆசிரம செயலர் மா சச்சிதானந்தா, சதானந்தா ஆகியோர் உடல் நலம் சரியில்லாததால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் குணமடைந்த பின், கோர்ட்டில் ஆஜராவார்கள். அவர்கள் தலைமறைவாக வில்லை,'' என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பவதி, இந்த வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=147347

No comments:

Post a Comment