January 2, 2011
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபல மானார். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இவரது ஆசிரம கிளைகள் உள்ளது.
இந்நிலையில் நித்யானந்தாவுடன் பிரபல நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவான நித்யானந்தாவை இமாச்சல பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதன் பிறகு ஜாமீனில் விடுதலையான நித்யானந்தா வழக்கம்போல ஆசிரம பணிகளை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஆசிரமத்துக்கும் நித்யானந்தா வந்தார். ஏராளமான பக்தர்கள் அவரை பார்ப்பதற்காக திரண்டனர். நித்யானந்தா மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த வழக்கின் காரண கர்த்தாவான நடிகை ரஞ்சிதா, கடந்த பல மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங் களூர் கோர்ட்டுக்கு வந்த அவர் ஆபாச வீடியோவை வெளியிட்ட நித்யானந்தா வின் சீடர் லெனின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி வழக்கு தொடர்ந்தார்.
நித்யானந்தாவுடன் ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை. லெனின் என்னை கற்பழிக்க முயன் றார். நான் அதற்கு ஒத்துழைக் காததால் இது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் ரஞ்சிதா கூறினார். இதற்கிடையே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரியானந்தா என்ற நித்யானந்தாவின் பெண் சீடர் ஒருவரும் லெனின், தன்னை கற்பழிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
சீடர் லெனின் மீதான இந்த தொடர் புகார்கள் வழக்கை திசை திருப்புமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக லெனினிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
கேள்வி:- ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் பெண் சீடர் சுப்ரியானந்தா ஆகியோர் உங்கள் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்களே?
பதில்:- நித்யானந்தா மீதான வழக்கு வலுவாக உள்ளது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் அவ ருக்கு 30 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். எனவே என்னுடன் அவரது ஆட்கள் சமாதான பேச்சு நடத்தினர். ரூ.20 கோடி வரை தருவதாக கூறினார்கள். நான் வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் ரஞ்சிதா மூல மாக என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர்.
ஆபாச வீடியோ வெளியானபோது என் மீது பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 47 பேர் புகார் கொடுத்தனர். நித்யானந்தா வின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்த என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர். இது தொடர்பாக 5 வழக் குகள் நிலுவையில் உள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த வீடியோவை நானே எடுக்க வில்லை. எனக்கு கிடைத்த வீடியோ காட்சியை வெளியிட்டேன். அவ்வளவுதான்.
கே:- அப்படியானால் ஆபாச வீடியோவை எடுத்தது யார்? எப்படி எடுக்கப்பட்டது?
ப:- இதுபற்றிய அனைத்து விவரங்களையும் போலீசிடம் தெரிவித்துள்ளேன். குற்றப் பத்திரிகையில் அது இடம் பெற்றுள்ளது. ரகசியம் காக்க வேண்டியிருப்பதால் அது பற்றி இப்போது விரிவாக கூற முடியாது.
கே:- ஆபாச வீடியோவை நீங்கள் எடுத்ததாகத்தானே செய்திகள் வெளி வந்தன.
ப:- ஊடகங்களில்தான் அப்படி வெளியானது.
கே:- நீங்கள் சொல்வதை பார்த்தால் ஆபாச வீடியோ வின் பின்னணியில் நிறைய பேர் இருப்பார்கள் போல் தெரிகிறதே? அதுபற்றி கூற முடியுமா?
ப:- ஆபாச வீடியோ தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி விரிவாக பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை நித்யானந்தாவின் முகமூடியை கிழிக்கவேண்டும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டது. இன்று வரை எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவ்வாறு சீடர் லெனின் கூறினார்.
http://www.alaikal.com/news/?p=53465
No comments:
Post a Comment