Friday, February 25, 2011

பெங்களூர் ஆசிரமத்தில் நித்யானந்தாவின் 3 சீடர்கள் கைது

பெங்களூர்: வீடியோ விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த நித்யானந்தா ஜாமீனில் வெளியே வந்து தற்போது பெங்களூர்- மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் தனது தியான பீடத்தில் தங்கி இருந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந் நிலையில் நித்யானந்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாநில குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று தியான பீடத்துக்கு போலீசார் சென்றபோது நித்யானந்தாவின் சீடர்களுக்கும், குற்றப்பிரிவு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே குற்றப் பிரிவு போலீசார் தேடி வந்த மாசாதனந்தா என்ற ஜமுனா காரில் ஏறிச் சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பிடுதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தந்தனர்.

அதில் விசாரணைக்குரிய பெண்ணை காரில் அழைத்துச் சென்றுவிட்டதோடு ஆசிரமத்தில் உள்ள 3 பேர் எங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தனர் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை பிடுதி போலீசார் தியான பீட ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சச்சிதானந்தா, தயானந்தா, சாந்தி மயானந்தா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/02/25/three-disciples-of-nithyananda-arrested-bangalore-aid0090.html

No comments:

Post a Comment