20-07-2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியே தலை காட்டத் துவங்கியிருக்கும் நித்தி, "ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா நாளில் பக்தர்களை அந்தரத்தில் மிதக்கவைக்கவிருக்கிறேன்'’ என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பிடதி ஆசிரமம் ஜெகஜோதியாக மின்னியது. உடலை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்தியின் சாகஸத்தைக் ’கண்டு களிக்க’ உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் ஏராளமாக நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர். புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு சக்தியா? அதுவும் நித்தியின் உடம்பிலா? எந்த சக்தியைக் கொண்டு அவர் பக்தர்களை மிதக்க வைக்கப் போகிறார்? ஏதேனும் மந்திரக்கோல் வைத்திருப்பாரோ? என்கிற கேள்விகளுடன், ஏகத்துக்கும் ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக காத்திருந்தனர் பக்தர்கள். கூட்டம் நிரம்பியதை அறிந்து, தனக்காக ஏக அலங்காரத்துடன் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய்ய சிம்மாசனத்தில்’தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வந்தமர்ந்தார் நித்தி. அப்போது நித்தி,’""நான் இப்போ உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டப்போகிறேன். குண்டலினி சக்தியின் வலிமை உங்களுக்குத் தெரியும். அந்த சக்தியைக்கொண்டு, புவியீர்ப்பு விசைக்கு எதிரா உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்கப்போகிறேன்''’’என்றார் ஒரு லத்தியை இடது கையில் வைத்து ஆட்டியபடியே. அந்த லத்தியைப் பார்த்து அடிக்கடி, "ப்பூ... ப்பூ...' என்று ஊதிக்கொண்டிருந்த நித்தி,’’""குண்டலினி சக்தியை நீங்க அடையணும்னா உங்களுக்கு வயசாகிடும். அதனால நானே அந்த சக்தியை வைத்திருக்கிறதால அதைக்கொண்டு உங்க உடலை தரையைவிட்டு எழுப்பிக்காட்டு றேன்''’என்றார். அந்த ’சொற்பொழிவைக் கேட்டு மேலும் பரவசமான பக்தர்கள், தங்கள் உடல் அந்தரத்தில் மிதக்க போவதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தரத்தில் உடல் மிதக்கப் போவதால்... திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர். இதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. ஹெல்மெட் அணியாத சீடர்கள் ஹெல்மெட் அணிந்தவர்களை ஏதோ வேற்று கிரகத்து ஆசாமியைப்போல பார்த்தனர். தனது கையில் வாளும் கேடயம் மாதிரி ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்த நித்யா னந்தா, கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு கண் களை திறந்து வாயை குவித்து மீண்டும் முணுமுணுக்க "சூ... சூ... ப்பூ... ப்பூ...' என்கிற ஓசைகள் வெளிப்பட்டது. பக்தர்களும் சீடர்களும் கண்ணிமைக்காமல் நித்தியை கவனித்துக் கொண்டிருந்தனர். சில பக்தர்கள் நித்தியைப் போலவே "ச்சூ... ச்சூ...' என ஓசை எழுப்பி னார்கள். "ம்... நடக்கட்டும்... படை திரளட்டும்...' என்று "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல சீடர்களைப் பார்த்து தனது வலது கையை நீட்டி நித்தி சைகை செய்ய, நித்தியைச் சுற்றி மேடையில் இருந்த சீடர்களும் கீழே அமர்ந்திருந்த பெண் சீடர்களும் உட்கார்ந்த நிலையிலேயே சாமியாடினார்கள். அப்போது நித்தி,’’""சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்தே உடம்பை எம்பி எம்பி குதியுங் கள்.. ஒரு கட்டத்தில் உங்க உடல் அந்தரத்தில் மிதக்கும்''’என்று சொல்ல, அதேமாதிரி எம்ப முயன்றனர். ரஞ்சிதாவைப் பார்த்து, "நீயும் குதி..' என்கிற தொனியில் நித்தி சைகைக் காட்ட... தனது சேலையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஆவேசம் வந்தவர் மாதிரி... துள்ளிக் குதிக்கத் துவங்கினார் ரஞ்சிதா. குதித்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து வினோதமான ஒலிகள் எழுந்தன. ஹெல்மெட் மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் நித்தியிடம் போய் "என்னையும் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியுமா?' என்று கேட்க, ""ம்... முடியும் நீயும் குதி..'' என்றார். அந்த ஹெல்மெட் ஆசாமியும் துள்ளாட்டம் போட்டார். துள்ளாட்டமும் குதியாட்டமும் சில நிமிடங் கள் நீடிக்க... தரை யைவிட்டு ஒருத்தருடைய உடலும் ஒரு இன்ஞ் கூட மேலே எழும்பவில்லை. துள்ளாட்டம் போட்ட பலருக்கும் கழுத்து சுளுக் கிக்கொண்டது போல.. .தங்கள் கழுத்தை பிடித்துக் கொண்டே’"அப்பாடா... முடியல...'’என்றபடியே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். தான் சொன்னபடி யாருடைய உடம்பும் அந்தரத்தில் மிதக்காததால் சற்றே அதிர்ச்சியடைந்தார் நித்தி. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே இருந்தார் நித்யா னந்தா. கொஞ்சம்கூட அவரிடம் வெட்கமோ கூச்சமோ தெரிய வில்லை. வெளிநாட்டு பக்தர்கள் பலரும் "எங்களை முட்டாளாக்கு கிறீர்கள்'’என்று சத்தம் போட, அவர்களை நித்தியின் உள்ளூர் சீடர்கள் சமாதானப்படுத்துகிற விதத்தில் அடக்கினார்கள். சிலர் நித்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போதும் கொஞ்சம்கூட லச்சையில்லாமல் ’’"குதிச்சிக்கிட்டே இருந்தா உடம்பு மேலே போகும். நிறுத்தக்கூடாது. ஏன் நிறுத்துனீங்க. நிறுத்துனதுனாலதான் உங்க உடம்பு மேலே போகல'’என்று காமெடிபண்ணி மழுப்பினார். இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார். இந்து சமயத்தை பாதுகாக்கும் பணியில் கடந்த 15 வருடங்களாக ஈடுபட்டு வருபவரும் ஆன்மிக சாமியார்களின் மோசடிகளுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,’""நமது உடலின் மூலா தாரத்திலிருந்து 6 சக்தி மையங்கள் மூலம் முதுகுத்தண்டு வழியாக உயிர்நிலையை நெற்றிக்கு கொண்டுவரும் சக்திக்கு குண்ட லினி சக்தி என்று பேர். தன் னைத்தானே உணரும் சக்தி இது. இந்த சக்தியை பயன்படுத்தும் போது நமது உடல், காற்றைவிட மிக லேசாக ஆகிவிடும். புவி ஈர்ப்பு விசையை விட லேசாக இருக்கும். அதனால் உடல் அந்தரத்தில் மிதக்கும். இதை ஒருநாளில் பெற்றுவிட முடியாது. கடுமையான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி என பன்னெடுங்காலம் செய் திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அருள்மிகு வள்ளலார் குண்டலினி சக்தியைப் பெற்றவர். அதை பலமுறை நிரூபித்திருக்கிறார். அந்த சக்தியைத்தான் தனது தலைக்கு மேலே ஜீவஜோதியாக கொண்டிருக்கிறார் வள்ளலார். ஆனந்தமான நிலை இது. அதே போலத்தான் தனது சீடர் விவே கானந்தருக்கு தனது தவ வலிமையைக்காட்ட குண்டலினி சக்தி மூலம் அந்தரத்தில் மிதந்தார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். நான்தான் பரமஹம்ஸர் என உதார்விடும் நித்யானந்தா, முதலில் தனது உடலை அந்தரத்தில் மிதக்கவைத்து காட்டட்டும். அப்புறம் தனது சீடர்களின் உடலை மிதக்க வைக்கலாம். நாங்கள் சவால் விடுகிறோம்... இவர் அந்தரத்தில் மிதப்பாரா? மிதக்க முடியுமா? உள்ளத்தில் தூய்மை, உடலில் தூய்மை, பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தல் போன்ற குணங்களாலும் கடுமையான தவ வலிமையினாலும் மட்டுமே இந்த சக்தியைப் பெற முடியும். ஆனால் இந்த குணங்கள் எதுவும் நித்திக்கு கிடையாது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் 30 வயது இளைஞனுக்கு இருக்கும் லௌகீக குணங்கள்தான். இதனை இவரை நம்பிப்போகும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்'' என்கிறார் அதிரடியாக. துள்ளாட்டம், குதியாட்டம் மூலம் நித்தி- ரஞ்சி ஜோடியின் மற்றொரு மோசடி முகம் கிழிந்து தொங்கி குப்பையாகி கழுதையின் வாயில் போய்க்கொண்டி ருக்கிறது.. -ஆர்.இளையசெல்வன்
|
This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda. Satyameva Jayate
No comments:
Post a Comment