Wednesday, July 20, 2011

நித்தியை கைது செய்ய கோரி திக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சாமியார் நித்யானந்தாவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க கூடாது, கர்நாடக கோர்ட் வழங்கி உள்ள ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும், நித்யானந்தா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றம் மாவட்ட இளைஞரணி சார்பில் ஈரோட்டில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி தலைமை தாங்குகிறார்.

மாநில இளைஞரணி துணை செயலாளர் வைரம், மண்டல இளைஞரணி செயலாளர் நடராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன்,

கோபி மாவட்ட தலைவர் கருப்பசாமி, செயலாளர் சவுந்தர், ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற உள்ளார்.

No comments:

Post a Comment