ஞாயிற்றுக்கிழமை, 31, ஜூலை 2011 (14:41 IST) பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம், இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.
|
This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda. Satyameva Jayate
No comments:
Post a Comment