Monday, July 25, 2011

சாட்சிகள் மீது செல்வாக்கை திணிக்க முயற்சி நித்யானந்தா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் திராவிடர் கழகம் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்   7/25/2011 14:12:44
 தர்மபுரி: சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்த நித்யானந்தாவின் வழக்கு விசாரணை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வேண்டும் என்று தி.க. தலைமை சொற்பொழிவாளர் அண்ணாசரவணன் பேசினார்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவின், ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மகளிரணி மாவட்ட அமைப்பாளர் நளினி தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் காமராஜ், செயலாளர் காரல்மார்க்ஸ், தி.க. மகளிர் பாசறை சாந்தி, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி நிர்வாகி சுடரொளி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைமை சொற்பொழிவாளர் அண்ணா சரவணன் பேசியதாவது:
பாலியல் குற்றவாளி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தண்டனை வழங்க வேண்டும். நித்யானந்தாவின் வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கைப் பாதிக்கும் வகையில் சாட்சிகள் மீது தன் செல்வாக்கைக் திணிக்கும் விதமாக பேட்டி கொடுத்திருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இவரது செயல்கள் சரியானது தானா?. நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் சிவாஜி, பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் ஊமைஜெயராமன், வேங்கன், மாவட்ட துணை தலைவர் கதிர், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், சிசுபாலன், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தி.க. மகளிரணி நிர்வாகி அருள்மொழி நன்றி கூறினார்.

http://www.dinakaran.com/District_detail_2011.asp?Nid=721

No comments:

Post a Comment