Tuesday, July 19, 2011

Complaint Against Nithyanada: Chennai Police Investigating-நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் : சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது!

சென்னை : நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் பற்றி சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது. பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்து மதத்தை துணைக்கு அழைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாக ஆணையர் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார். 

Credits: Dinakaran

நித்யானந்தா மீது நடவடிக்கை!

கோவை : கோவையில் நடராஜன் எம்.பி, ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகம் என்ற பெயரில் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் எந்த சட்ட திட்டத்துக்கும் உட்படாமல் இறைவனை சென்றடைய வழி எனக் கூறிக்கொண்டு, போதை உட்கொண்டவர்களை போல ஆண்களையும், பெண்களையும் குதிக்க வைக்கிறார்கள். சாமியாட வைக்கிறார்கள். போலி சாமியார்களை தோலுரித்து காட்டுகின்ற வகையில் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Credits: Dinakaran

No comments:

Post a Comment