Monday, August 1, 2011

இந்து மதத்தில் இருந்து நித்தியானந்தா ஓடிவிட வேண்டும்

August 1st, 2011,
Image

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளை ஞர் அணி சார்பில், சுவாமி நித்யானந்தாவை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில செயலாளர் ஞானசம்பந்தன் பேசியதாவது: இந்து மதத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு இந்துமத தாய்மார்களையும், பெண்களையும் அந்தரத்தில் பறக்கவிடுகிறேன் என மோசடி செய்து வருகிறார்.

அவரது மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம்.

உண்மையான இந்து மதத்தின் ஆன்மீக வாதி தனது பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. தனது பிரசாரம் மூலம் நித்யானந்தா சம்பாதித்த சொத்துகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை சுவாமி நித்யா னந்தா என்று அழைப்பதை விட காதல் மன்னன் நித்யா னந்தா என்ன அழைப்பதே பொருத்தமானது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து அவர் ஓடிவிட வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் ஞான சம்பந்தன் கூறினார்.

http://www.padukai.com/topic26630.html

No comments:

Post a Comment