Monday, August 8, 2011

நித்யானந்தா பீடம் நடத்திய பட்டினி போராட்டத்தில் ஐஸ்கிரீம், ஸ்நாக்ஸ் சப்ளை

சென்னை : நித்யானந்த தியான பீடம் சார்பில் ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் எதிரில் நேற்று நடந்தது. தியான பீடத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் 20 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது.
அங்கிருந்த ஒரு மரத்தில் ஆணி அடித்து நித்யானந்தா போட்டோ மாட்டியிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக வெளியே சென்றனர்.

அருகே உள்ள கடைகளுக்கு சென்று வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் ஆப்பிள், ஆரெஞ்சு ஜூஸ் குடித்து விட்டு, மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்து கொண்டனர். பட்டினி போராட்டத்தில் அவ்வப்பொழுது தண்ணீர் பாட்டில், ஐஸ் கிரீம், ஸ்நாக்ஸ் வகைகள் வினியோகிக்கப்பட்டது. அவற்றை சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் இறுக்கமான முகத்துடனேயே அமர்ந்து இருந்தனர்.

அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெரிந்தது. பேசிய ஒவ்வொருவரும் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள் தொடர்பாகவே பேசினர். அப்போதெல்லாம் பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டு சிரித்தனர். ஒரு சிலர் முகம் சுழித்தனர். மதியத்திற்கு பிறகு பலர் ஓரமாக சென்று தூங்கி விட்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒருவர் கூட வரவில்லை. பாதுகாப்புக்கு போலீசார் மட்டுமே வந்திருந்தனர்.

அந்த வழியாக நடந்து சென்றவர்களில் சிலர் வேடிக்கை பார்த்தனர். தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரித்தபடியே கலைந்ததை மட்டுமே காண முடிந்தது. வேடிக்கை பார்ப்பவர்கள் பார்வையில் படுவதை தவிர்க்க, பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டனர்.

ரஞ்சிதா வராததால் கூட்டம் இல்லை

போராட்டத்திற்கு நடிகை ரஞ்சிதா வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் வந்திருந்தனர். ‘‘ரஞ்சிதா வருவாரா?’’ என்று கூட்டத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். ஆனால், தியான பீடம் நிர்வாகிகள் பதில் ஏதும் கூறவில்லை. ரஞ்சிதா வரவில்லை என்று தெரிந்ததும், அவர்கள் சென்று விட்டனர்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2814

No comments:

Post a Comment