Friday, May 11, 2012

Opposition to Nithyananda's Appointment Growing


நித்யானந்தா நியமனம் எதிர்ப்பு வலுக்கிறது

பதிவு செய்த நாள் : 
மே 11,2012,00:46 IST

மதுரை: மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதுரையில், சங்கத்தின் மாநில கவுரவ தலைவர் அருணன் கூறுகையில், "மதுரை ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிக்க, அதற்கென உரிமை, கட்டுப்பாடு, பயிற்சிகள் பல உள்ளன. இவை எதுவும் இல்லாமல், பாலியல் வழக்கில் தொடர்புடைய நித்யானந்தாவை வாரிசாக நியமித்தது சரியில்லை.
ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும், மக்கள் கொடுத்தவை. இந்த சொத்துக்கள் நித்யானந்தாவிடம் சென்றால், அது பாதுகாப்பாக இருக்காது. நித்யானந்தா மீதான வழக்கு தீரும் வரை, அவரை நியமிக்கக் கூடாது. எனவே, அவரது நியமனத்தை, மதுரை ஆதீனம் வாபஸ் பெறவேண்டும் என்றார். இந்நிலையில், மதுரை ஆதீன மீட்புக் குழு சார்பில், மே 13ல், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள, தருமபுர ஆதீன சொக்கநாதர் திருமண மண்டபத்தில், "மதுரை ஆதீன மீட்பு ஆலோசனை மாநாடு' நடைபெறுகிறது. இதில், இந்து சமய இயக்கங்கள், சிவனடியார்கள், துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். 

Source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=465005

No comments:

Post a Comment