Wednesday, November 7, 2012

Donated Land Fraudulently Shown as Purchased: 4 Nithyananda Disciples Face Enquiry from S.P.

தான நிலத்தை விலைக்கு வாங்கியதாக மோசடி : நித்யானந்தா சீடர்கள் 4 பேரிடம் எஸ்.பி., விசாரணை
 நவம்பர் 06,2012,00:08 IST
சேலம் : தான நிலத்தை, விலைக்கு வாங்கியதாக நடந்த மோசடி தொடர்பாக, நித்யானந்தா சீடர்கள் நால்வரிடம், நேற்று சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் விசாரணை நடத்தினார். சேலம், சீரகாபாடியை சேர்ந்த விவசாயி குணசேகரன், 50. இவர், தனது 50 சென்ட் நிலத்தை, நித்யானந்தாவின் ஆன்மிக பணிக்காக, தானமாக கொடுத்து விட்டார். இதற்கான தான செட்டில்மென்ட், 2006, நவ., 30ல் நடந்துள்ளது. ஆனால், நிலத்தை, விற்பனை செய்து விட்டதாக, பத்திரப்பதிவு செய்திருப்பது தெரிந்து, குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கேட்டபோது, நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட குணசேகரன், நவ., 3 ல், சேலம் தனிப்பிரிவு போலீசில் புகார் செய்தார். நில அபகரிப்பு மீட்பு டி.எஸ்.பி., முனியப்பன், சீடர்கள் நால்வரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, சேலம் எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் நேற்று விசாரணை நடத்தினார். இதில், நித்யானந்தா சீடர்களும், தியானபீட நிர்வாகிகளுமான நான்கு பேர், விளக்கமளித்தனர். அப்போது, 25 ஆயிரம் ரூபாய் நிலத்தை வாங்கியதற்கான, பத்திரப்பதிவு நகலையும் வழங்கினர். இந்த ஆவணம், நில அபகரிப்பு மீட்புக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்காக, நேரில் வந்து செல்ல வேண்டும் என, அறிவுறுத்தி, சீடர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் கூறுகையில், ""நில மதிப்பு வழிகாட்டிபடி, இந்த நிலம் வாங்கப்பட்டதா, விலையை குறைத்து வாங்கி மோசடி நடந்துள்ளதா, பத்திரப்பதிவு நடந்தது உண்மையா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முடிவில், மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=580289

No comments:

Post a Comment