http://thatstamil.oneindia.in/news/2010/03/10/nithyananda-s-centre-shuts-down-mal.html
கோலாலம்பூர்: நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசியா [^]வில் அவர் பெயரில் இயங்கி வந்த அசிரமம் இழுத்து மூடப்பட்டது.
மலேசியாவில் நித்தியானந்தாவின் ஆன்மிக தத்துவ போதனைகளை பரப்புவதற்காக கோலாலம்பூர் தமான் தேசா கொம்பக்கில் ஆசிரமம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
மலேசியாவில் நித்யானந்தாவுக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட தீவிர பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த மையத்தில் தியானம் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் படுக்கையில் புரளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்யானந்தா சாமியார் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளோடு, கொலை, நில அபகரிப்பு என பல்வேறு புகார் [^]கள் கூறப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நித்யானந்தாவின் ஆசிரமங்கள் பல்வேறு இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.
மலேசியாவில் உள்ள ஆசிரமத்துக்கும் இந்த புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு தினந்தோறும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
புகார்கள் குறித்து நித்யானந்தா தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில், பக்தர்களின் கேள்விகளை இங்குள்ள ஆஸ்ரம நிர்வாகிகளால் சமாளிக்க முடியவில்லை.
Read: In English
இதனால், மலேசியாவில் உள்ள இந்து சங்கத்தின் அறிவுரைப்படி தற்காலிகமாக ஆஸ்ரமத்தை மூடுவதாக ஆசிரம செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment