Wednesday, March 10, 2010

மோசடி சாமியார்களுக்கு மரண தண்டனை தர வேண்டும்- யோகி ராம்தேவ் புதன்கிழமை, மார்ச் 10, 2010, 12:52[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/10/ramdev-death-sentence-fraud-religious.html

சிம்லா: மதத்தின் பெயரால் மோசடியான செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கும், மத குருக்களுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று யோகா குரு சுவாமி ராம்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிம்லாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏராளமான சாமியார்கள் மோசடி செயல்களில் சிக்கி அவர்கள் மீது பெருமளவில் வழக்குகள் தொடரப்படுவது பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது.

குறிப்பாக பாலியல் புகார் [^]களுக்கு ஆளாகும், நிதி முறைகேடுகளில் சிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளைத் தடுக்க ஒருவர் பாபா (குரு) ஆக குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதுதொடர்பாக முன்னணி மதத் தலைவர்களுடன் நான் பேசி வருகிறேன்.

மதத் தலைவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்க, கண்காணிக்க கமிட்டி என்று எதுவும் தனியாகத் தேவையில்லை. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களே இதைப் பார்த்துக் கொள்வார்கள்.
Read: In English
தவறு செய்யும் சாமியார்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார் ராம் தேவ்.

No comments:

Post a Comment