Monday, March 8, 2010

நித்யானந்தா.... விஜய்யின் 'கிர்ரேட் எஸ்கேப்'! திங்கள்கிழமை, மார்ச் 8, 2010, 17:02

http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/03/vijay-s-escape-from-nithyananda-iss.html


நித்யானந்தா சாமியாரைச் சந்தித்து ஆசி பெறவிருந்தார் விஜய் என்றும் அதற்கு முன்பாகவே அவரது காம லீலைகள் அம்பலத்துக்கு வந்ததில் தப்பி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

நித்யானந்தா பற்றி விஜய்யிடம் நிறைய பில்ட் அப் கொடுத்தவர் ரஞ்சிதாதானாம். வில்லு படத்தில் விஜய்யின் ஜோடிகளில் ஒருவராக நடித்தவர் ரஞ்சிதா (சீனியர் விஜய்க்கு மனைவி... ஜூனியர் விஜய்க்கு அம்மா!).

இதைத் தொடர்ந்து நித்யானந்தாவை சந்திக்க ஆவலாக இருந்தார் விஜய். அதற்கு முன்னோட்டமாக தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் தாய் ஷோபாவை திருவண்ணாமலைக்கு அனுப்பி சாமியாரிடம் ஆசி பெற்று வரச் சொன்னாராம். இதுபற்றிய செய்திகள் கடந்த வாரம் வெளியானது நினைவிருக்கலாம்.

விஜய்யின் பெற்றோர் நித்யானந்தனை அவரது திருவண்ணாமலை ஆசிரமத்தில் சந்தித்த போது விஜய் வந்து பார்க்கவும் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தனராம்.

அதற்குள் நித்தி-ரஞ்சிதா காம வீடியோ வெளியாகிவிட, அதிர்ந்து போனாராம் விஜய். நல்லவேளை தப்பினேன் என்று கூறி வருகிறாராம்.

No comments:

Post a Comment