Monday, March 8, 2010

நித்தியானந்தா தனது குருஜியுடன் இருக்கிறார் - வழக்குரைஞர் ஸ்ரீதர்

http://www.inneram.com/201003087020/nithyananda-with-his-guruji-advocate

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோக் காட்சிகளால் நாறிப்போயுள்ள சுவாமி நித்தியானந்தாவின் தன்னிலை விளக்க வீடியோ அறிக்கையை அவரது வழக்குரைஞர் ஸ்ரீதர் நேற்று செய்தியாளார்களிடம் வெளியிட்டார். நித்தியானந்தாவின் தியானபீடம் இணைய தளத்திலும் இது வெளியிடப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து வழக்குறைஞர் ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிவித்தவுடன் முன்ஜாமீனுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நித்யானந்தா சுவாமிகள் எங்கிருந்து இந்த வீடியோ கேசட்டை அனுப்பினார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரைக் கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.அவர் சட்டரீதியிலான பாதுகாப்புடன் தான் இனி வெளியே வருவார்.

நித்தியானந்தா கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. கடைசியாக கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது விளக்கம் அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் தன்னுடைய குரு பாபுஜியுடன்தான் இருக்கிறார் என்றார் ஸ்ரீதர்.

No comments:

Post a Comment