சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.
பிரம்மச்சாரி என்று கூறியும், பிரம்மச்சரியம் காத்தால்தான், உடலை கருவியாக வைத்து நினைத்ததை அடைய முடியும் என்றும் போதனை செய்து ஆன்மீக உலகில் வலம் வந்த நித்யானந்தா, மறுபக்கம் நடிகை ரஞ்சிதாவுடன் காவி உடையில் காம லீலை நடத்தியது முழுமையாக அம்பலத்துக்கு வந்துவிட்டது.
அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பக்தர்களில் பெரும்பாலானோர் நித்யானந்தாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் நித்யானந்தாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அதில் சிவசேனாவும் ஒன்று.
இந்த அமைப்பின் சார்பில் சென்னை முழுக்க நேற்றும் இன்றும் நித்யானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
நித்யானந்தா சாமியார் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், இந்து மதத்தை வளர்க்கவும், இந்து இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் அயராது பாடுபட்ட இளம் ஞானி நித்யானந்தாவை களங்கப்படுத்துவதா? என்று அந்த போஸ்டர்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் சிவசேனா கட்சியினர்.
பாரதிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பும் இது போன்ற போஸ்டர்களை சென்னையில் ஒட்டியுள்ளது.
நித்யானந்த சாமியார் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று வெளிப்படையாகவே இந்த அமைப்பு வக்காலத்து வாங்கியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2010/03/07/shiv-sena-backs-nithyananda.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29
No comments:
Post a Comment