Wednesday, July 28, 2010

Will take legal acton against media - Nithy

http://www.google.co.in/url?sa=t&source=web&cd=34&ved=0CDAQFjADOB4&url=http%3A%2F%2Fwww.koodal.com%2Fnews%2Ftamilnadu.asp%3Fid%3D54526%26section%3Dtamil%26title%3Dranjitha-may-soon-rejoin-nithyananda-ashram&ei=Un9QTIr-DIzUvQPjjLGHBw&usg=AFQjCNFEWqiVss7j4X58WAyXxCAMiO8afw


சென்னை, ஜூலை. 28-

நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம் என்று சென்னையில் நித்யானந்தா சீடர்கள் கூறினார்கள்.
அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் ஸ்ரீநித்ய ஞானானந்தா, தமிழ்நாடு நித்யானந்த தியானபீட செயல் தலைவர் ஸ்ரீநித்ய சர்வானந்தா ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நித்யானந்தாவிடம் ஆசி பெற்றனர். கடந்த 4 மாதங்களாக நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்கு புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். அகிம்சையை
கடைபிடியுங்கள் அமைதியாக இருங்கள், தர்மம் வென்றே தீரும் என்று எங்கள் நித்யானந்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக கடந்த காலக்கட்டங்களில் அமைதியாக இருந்தோம். ஆனால், தனியார் டி.வி. ஒன்றில் எங்கள் குருநாதர் மனம் புண்படும் வகையில் போலி சாமியார் என்று செய்தி ஒளிபரப்பானது.
குரு பூர்ணிமா விழாவில் கணவர்-குழந்தையோடு பங்கேற்ற எங்களது பக்தர் நடிகை மாளவிகாவை கொச்சைப்படுத்தி செய்தி ஒளிபரப்பினார்கள். இதை கண்டிக்கிறோம்.

எங்களை காட்சி பொருளாகவும், வியாபார பொருளாகவும் ஆக்கிவிட வேண்டாம். நித்யானந்தாவை பற்றி கூறும் அவதூறுகள் எங்களுடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன. நித்யானந்தா மீது அவதூறு செய்திகள் பரப்பியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். நடவடிக்கையும் எடுக்கப்போகிறோம். இதற்காக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி: நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதே? இது தான் தமிழ் கலாசாரத்தையும், இந்து தர்மத்தையும் காப்பாற்றும் செயலா?

பதில்: சாமியார் தொடர்பான காட்சி முழுக்க முழுக்க பொய்யானது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை.

கேள்வி: வீடியோ காட்சி பொய்யானது என்றால் நித்யானந்தா ஏன் தலைமறைவாக வேண்டும்?

பதில்: அப்போது எங்களது நிலைமை முள்ளில் விழுந்த சேலை போல இருந்தது. அதை பத்திரமாக எடுக்க வேண்டிய கடமையில் நாங்கள் இருந்தோம். இருந்த போதிலும் தன்னுடைய நிலைமையை விளக்கி நித்யானந்தா பேசி அனுப்பிய 2 வீடியோ காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேவை செய்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதை பல தலைவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அந்த நிலையை நித்யானந்தா அனுபவிக்கிறார்.

கேள்வி: ரஞ்சிதா கடைசியாக எப்போது ஆசிரமத்துக்கு வந்தார்?

பதில்: நடிகை ரஞ்சிதாவை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆசிரமத்தில் பார்த்து உள்ளோம்.

கேள்வி: நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?

பதில்: நடிகை ரஞ்சிதா தற்போது எங்கள் ஆசிரமத்தில் இல்லை. சிறந்த பக்தையான அவர் மீண்டும் வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம். மடத்தின் காவலாளியாக நாங்கள் இருந்தால் அவரை எந்தவித மறுப்பும் சொல்லாமல் அனுமதித்து விடுவோம்.

கேள்வி: நித்யானந்தா ஆண்மை இல்லாதவர் என்றும், பாலியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானதே?

பதில்: இது போன்ற செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை. நித்யானந்தா வெளியிட்ட 2 சி.டி.க்களிலும் இந்த வார்த்தைகள் எதுவும் இடம்பெறவே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது சாமியாரின் சீடர்கள் டாக்டர் நித்திய ரூபானந்தா, பெண்கள் சந்நியாசி பயிற்சி முகாம் தலைவி நித்ய சுப்பிரியானந்தா, நித்ய தேவி, தியான பீடத்தின் மக்கள் தொடர்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

Source: Tamil Koodal



சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது:கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட குருபூர்ணிமா நிகழ்ச்சியை கொச்சைப் படுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் சமூக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பாதிக்கிற வகையில் செயல்படுபவர்கள் மீது தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சட்டப்படி வழக்கு தொடர்வோம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

"நித்யானந்தாவும் நடிகையும் இடம் பெறும் வீடியோ பதிவு குறித்தும், ஆண்மையற்றவர் என்று போலீஸ் விசாரணையில் நித்யானந்தா பதில் சொன்னதாகவும் செய்திகள் வந்ததே உண்மையா?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு நித்யஞானானந்தா அளித்த பதில்: நித்யானந்தாவும், நடிகையும் இடம் பெற்றதாக வந்த வீடியோ போலியானது. போலீஸ் விசாரணையில் நித்யானந்தா ஆண்மையற்றவர் என்று கூறவில்லை. யாரோ தவறாக இப்படி சொல்லியுள்ளனர். நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை. அவர் தற்போது ஆசிரமத்தில் இல்லை. வெளியே எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம். இவ்வாறு நித்யஞானானந்தா கூறினார்.

No comments:

Post a Comment