Thursday, August 5, 2010

Cheating case against Nithy

Cheating case against Nithy

Translation (read original Tamil article below):

Even when he is aware that his own Karmas are rising high against him, Nithyananda has started his dance/play thinking that he can get away from everything with the money power. This is statement from one of the CID’s enquiring Nithyananda’s case.

What the CID meant by play is the Guru Poornima hungama.

Nithy had made arrangements for the Gurupoornima program on a Sunday at the ashram. Gurupoornima is the day when the guru takes/ accepts the sins of devotees. For the guru who takes away their sins , devotees offer rice, dhal, and also currency, gold, diamond at gurus feet.

Before Ranjitha CD was released, 15 to 20 thousand people used to take part in this event [at Bidadi ashram]. At that time the offerings devotees made at Nithy’s feet used to amount to Rs. 50 crores. Nithyananda was basking in the grand celebration of this event. But this time, like political parties, he had to indulge in gathering people.

People were picked up in vans and other vehicles. People of Karnataka were paid and were picked up to attend this event. Communities like Vishwa Hindu parishad were also brought for the function. Even then then there were hardly 1500 people. The pada puja collection was also very dull. Though Nithy was very upset with this, he faked a joyful appearance.
Nithy was moving around in the ashram on a golden palanquin and was enjoying throwing chocolates at the ladies as usual.

The ashram’s mega lingam had kumbabishekam in 2009. After that, this Gurupoornima saw the kumbabishekam with 100 pots of milk and 100 pots of sandalwood water. All these were done to attract the media and they wanted this to be published in a big way.

Nithy’s disciples met the press in Chennai. At that time they were repeatedly saying that Nithy-ranji Cd was fake.

We (Nakeeran team) told the Bangalore CIDs that Nithy-Ranji CD is being denied by them on what grounds/ how dare?

CID says we met Ranjitha in Chennai and spoke to her for may hrs. It looks like she also got brainwashed from the ashram side . she kept repeating that its not her and she does not know about the CD and that she and Nithy had not done anything. But there is solid proof that the CD is original.

The CD will speak for itself in the court to prove that the disciples are wrong.

In the same way Nithy is repeatedly saying that, I have no property and business in my name: I am only a swami. All properties are in the ashram’s name’. ‘There are charges filed against Nithyananda in America’ said the CID.

We (Nakeeran team) again and again asked the CID for the details of the case filed in America. Nithyananda has two trusts in the name of Nithyananda yoga foundation and life bliss foundation. The amount that got collected got exemption from the tax as it was declared that the amount was for service.

Declaring himself as a sanyasi, he had fun with Ranjitha playing... and rolling with her in bed against sanyas principle. Same way he was declaring that he is a sanyasi and that there is no property in his name, no business in his name, everything is in the trust's name. But going against his own declaration, he was running a share market firm in America with some partners.

In the company named ‘ Nithyananda Capital Management’, Gopika’s husband Rajesh Krishnan was the MD and Shuping Lin is the partner. Along with them Nithyananda is also a partner with the name nithyananda swami. (please refer to the proof).

Like India’s share market fraud by Harshad Mehta, America’s ‘Nithyananda Capital Management’ where nithyananda is the manager, also is involved in too many frauds. The American police which has found this with all proofs is planning to bring Nithy to books/enquiry soon.

So, looks like Nithy’s worst karmas is not going to leave him easily.


தனது கர்மவினைகள் தனக்கு எதிராக விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தும்... பண பலத்தால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில்.. மீண்டும் பிடதி ஆசிரமத்தில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் நித்யானந்தா''’என்று மர்மப் புன்னகை பூத்தார் நித்தியின் வழக்கை விசாரிக்கும் அந்த பெங்களூர் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி.

அவர் ஆட்டம் என்று குறிப்பிட்டது நித்தி நடத்திய குரு பூர்ணிமா நிகழ்ச்சியை.

ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்ச்சியை தன் பிடதி ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்தார் நித்தி. குரு பூர்ணிமா என்பது பக்தர்களின் பாவங்களை குருவானவர் ஏற்றுக்கொள்ளும் வைபவம். இப்படி தங்கள் பாவ வினைகளை ஏற்கும் குருவிற்கு, பக்தர்கள்... அரிசி, பருப்பு முதலான தானியங்கள் தொடங்கி, கரன்ஸிகள், தங்க, வைர ஆபரணங்கள்வரை காணிக்கையாக செலுத்தி பாதபூஜை செய்வார்கள்.

ரஞ்சிதா சி.டி. வெளியாவதற்கு முன்... இந்த நிகழ்ச்சியில் 15-ல் இருந்து 20 ஆயிரம்பேர் வரை கலந்துகொள்வார்கள். அப்போது காணிக்கையாக... அங்கு வரும் பக்தர்கள் அத்தனைபேரும் நித்தியின் காலடியில் கொட்டும் காணிக்கையின் மதிப்பு 50 கோடி ரூபாய் அளவிற்குக் கூட இருக்கும். இப்படி கோலாகலமாக குருபூர்ணிமாவைக் கொண்டாடி வசூலில் திளைக்கும் நித்யானந்தா... இந்த முறை... சில அரசியல் கட்சிகளைப்போல ஆள்திரட்டும் வேலையில் இறங்கவேண்டியிருந்தது.

வாகனங்கள் மூலம் அங்கங்கே ஆட்கள் திரட்டப்பட்டனர். கர்நாடகா வைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் கூலிகொடுத்துக் கூட்டிவரப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்பினர் சிலரும் தருவிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் 1500 பேரைத் தாண்டவில்லை. பாதாபிஷேக வசூலும் ரொம்பவே டல்லடித்தது. இதில் ரொம்பவே நித்தி அப்செட் ஆனாலும்... அடிக்கடி தான் உற்சாகமாக இருப்பதுபோல்... காட்டிக்கொண்டார். தங்கப் பல்லக்கில் ஏறி ஆசிரமத்துக்குள் ரவுண்ட் அடித்த நித்தி.. வழக்கம்போல் பெண்கள் மீது சாக்லெட்களை வீசியெறிந்து ஆனந்தப்பட்டார்.

ஆசிரமத்துக்குள் இருக்கும் மெஹா சைஸ் லிங்கமான வைத்திய சரோவர் லிங்கத்துக்கு 2009-ல்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இருந்தும் குரு பூர்ணிமா அன்றும் 100 குடம் பால், 100 குடம் சந்தனக் கரைசல் என பலவற்றாலும் கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

இதெல்லாம் பத்திரிகைகளில் பெரிதாக வரவேண்டும் என்பதற்காக நித்யாவின் சிஷ்யர்கள் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது நித்தி-ரஞ்சி சி.டி. போலியானது என்று திரும்பத் திரும்பச் சொன்னார் கள்.

நாம் பெங்களூர் சி.ஐ.டி. அதிகாரியிடம்... "நித்தி-ரஞ்சி சி.டி. காட்சிகளை மறுக்கிறார்களே... எந்த தைரியத்தில்?'' என்றோம்.

அவரோ, ""ரஞ்சிதாவையே சென்னையி லேயே வைத்து 8 மணிநேரம் விசாரித்தோம். அவர் ஆசிரமத் தரப்பால் சரி செய்யப்பட்டி ருக்கிறார். எனவேதான் "அந்த சி.டி. காட்சி பத்தி எனக்குத் தெரியாது... நானும் அவரும் எதுவும் பண்ணலை'ன்னு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அது உண்மையான சி.டி.தான் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக இருக்கிறது. சிஷ்யர்கள் சொல்வது பொய் என்பது உரிய நேரத்தில் கோர்ட்டில் சி.டி. பேசும். அதேபோல் "என் பெயரில் சொத்துக்களோ பிஸ்னஸோ இல்லை. நான் வெறும் சாமியார்தான். எல்லாச் சொத்துக்களுமே ஆசிரமத்தின் பேரில்தான் இருக்கு' என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நித்யானந்தா மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது''’என்றார் அழுத்தம் திருத்தமாய்.

அது என்ன மோசடி வழக்கு என்று நாம் துருவத்தொடங்கி னோம்..

நித்யானந்தாவோ அமெரிக்காவில் நித்யா யோக ஃபவுண் டேசன், லைட் ப்ளஸ் ஃபவுண்டேசன் என்கிற பெயர்களில் அறக்கட்டளைகளைத் தொடங்கியிருக்கிறார். இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களின் சேவைக்காக என்று சொல்லி... அறக்கட்டளைக் குக் குவியும் நிதிகளுக்கு வரிவிலக்கும் பெற்றிருக்கிறார்.

இது ஒருபக்கம் என்றால்... தன்னை சந்நியாசி என்று சொல்லிக்கொண்டு எப்படி ரஞ்சிதாவை படுக்கையில் உருட்டி விளையாடி... சந்நியாசத்துக்கு எதிராக நடந்துகொண்டாரோ... அதேபோல்... ‘"என் பெயரில் எந்த சொத்துக்களும் நிறுவனங்களும் இல்லை. எல்லாமே ஆசிரம அறக்கட்டளையின் பெயரில்தான் இருக் கிறது. நான் ஒரு துறவி'’ என்று எல்லா இடங்களிலும் தன்னைப் பற்றி சுத்தமானவராக அறிவித்துக்கொள்ளும் நித்யானந்தா... தன் அறிவிப்பிற்கு மாறாக அமெரிக்காவில் ஒரு ஷேர் மார்க்கெட் நிறுவனத்தையே பார்ட்னர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டி ருக்கிறார்.

"நித்யானந்தா கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட்'’ என்ற பெயரிலான இந்த ஷேர் மார்க்கெட் கம்பெனியில் மேனேஜர்களாக (எம்.டி) கோபிகாவின் கணவரான ராஜேஷ் கிருஷ்ணன், சுப்பிங்லின் ஆகியோரோடு ’ஸ்ரீ நித்யானந்தா சுவாமி’ என்ற பெயரில்... இந்த நித்தியும் இருக்கிறார். (ஆதாரம் காண்க:)

இந்தியாவில் பங்கு மார்க்கெட் பிஸ்னஸில் ஹர்ஷத் மேத்தா பண்ணிய கோல்மால்கள் போல்... அமெரிக்காவில் நித்யானந்தா மேனேஜராக இருந்து நடத்திவரும் இந்த ஷேர்மார்க்கெட் கம்பெனியிலும் ஏகப்பட்ட ஃபிராடுத்தனங்கள் அரங்கேறியிருக்கிறது. இதை ஆதாரத்தோடு கண்டுபிடித்திருக்கும் அமெரிக்கப் போலீஸ்... நித்தியை தனது விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டுவர இருக்கிறது என்கிறது அமெரிக்கத் தரப்பு..

ஆக, நித்தியின் மோசமான கர்மவினைகள் அவரை லேசில் விடாது போலிருக்கிறது


Source: Nakkeeran

3 comments:

  1. இதிலிருந்து நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக சல்லாபிப்பது போன்ற வீடியோ காட்சிகள் உண்மைதான் என்பதை எஸ்.வி. சேகர், நன்கு விசாரித்து பேட்டி கொடுத்துள்ளார் , முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்றும் கூறுகிறார்(http://www.maalaimalar.com/2010/08/05114116/nithanandha-in-svsekar-meeti.html) , ஆன்மீகம், பிரம்மச்சாராம்,சந்நியாசம், தியானம் இன்நான்கையும் குழப்பிக்கொள்கிரர்கள். இரவில் பெண்களோடு சல்லாபிப்பது பகலில் பிரமச்சாரிகளையும், பிரமச்சாரிநிகளையும், உருவாக்குவது என்பது ஏற்றுகொள்ள முடியாதது ,அப்படியென்றால் அந்த வேலையை நானும் நீங்களும் செய்து விடலாம் அதற்க்கு ஒரு நித்யானந்தஒ ரமணமகரிஷியோ தேவை இல்லை . நம்ம ஊரில் உள்ள குப்பன் , சுப்பனும் கூட வருடத்தில் ஒருமுறை காவி அணிந்து கோவிலுக்கு செல்கிறான் , அந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் அனால் நீ காவி உடையுடன் செய்த அசிங்கத்தை என்னவென்று சொல்ல , உனக்கு ஜால்ரா போடும் முதுகெலும்பு இல்லாத கூட்டமும் உன்னைபோலதானே இருக்கும். தெய்வம் நின்று கொள்ளும் ( இருந்தால் ).

    ReplyDelete
  2. Hi...
    I was wondering if you know anyone who was able to get their money back after taking IA or LBE program? I could really use the money that I had spent on that very expensive program.
    Thanks for all your help.

    ReplyDelete
  3. nope this greedy ashram wont return a cent .....

    ReplyDelete