This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda. Satyameva Jayate
Wednesday, January 19, 2011
NITHYANANDA CREATES TROUBLE IN TIRUVANNAMALAI
Nithyananda is currently visiting Tiruvannamalai for his grandmother's death ceremony, and staying in his ashram there. Trouble broke out when a foreign national from Canada took some pictures of Nithyananda. Nithyananda objected to it and immediately his disciples and devotees attacked the Canadian and damaged his car. A complaint has been filed against Nithyananda, and there is a request to even cancel his bail.
This incident clearly shows (once again) how aggressive and intimidating Nithyananda and his disciples/devotees are! So much for a spiritual master and spiritual discisples!
வீடியோ படம் எடுத்த வெளிநாட்டு பயணி மீது தாக்குதல் : தி.மலை நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் மீது புகார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், நித்யானந்தா ஆசிரமத்தை, வீடியோ படம் எடுத்த, கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியை, ஆசிரம நிர்வாகிகள் தாக்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலை காணவும், மகான்கள் வாழ்ந்த இந்த தலத்தில் உள்ள ரமணர் ஆசிரமம், யோகிராம் ஆசிரமம், சேஷாத்திரி ஆசிரமம் போன்றவற்றை கண்டு, அங்கு தியானம் செய்யவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், சிலர் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தங்கிச் செல்கின்றனர். கனடா நாட்டை சேர்ந்த ஹென்றிபோர்டு, தன் நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.அவர், கடந்த 17ம் தேதி, கிரிவலம் சென்றார். கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள், கோவில்கள், அஷ்டலிங்கங்கள் போன்ற முக்கிய இடங்களை வீடியோவில் படம் எடுத்தவாறு சென்றார்.
கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை, ரோட்டில் நின்றவாறு வீடியோ எடுத்துவிட்டு, நடந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், திடீரென்று டாடா சுமோவில் துரத்திச் சென்று, வீடியோ படம் எடுத்த ஹென்றிபோர்டுவின் வீடியோ கேமராவை பறித்து, அவரை சரமாரியாக தாக்கியது. இதில், அவரது வலது கை முறிந்தது.இது குறித்து ஹென்றிபோர்டு, திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார், நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்தவர்களை அழைத்து விசாரித்தனர். ஹென்றியிடமிருந்து பறித்துச் சென்ற வீடியோ கேமராவை மட்டும் மீண்டும் வாங்கிக் கொடுத்தனர்.
போலீசார் புகாரை பெற்றுக் கொண்டதற்கான, அத்தாட்சி கடிதத்தை ஹென்றிபோர்டுவிடம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினர். ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிருக்கு பயந்த, ஹென்றிபோர்டு, புதுச்சேரிக்கு சென்றுவிட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி எங்களிடம் புகார் எதுவும் தரவில்லை. அதனால், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என்று கூறினர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169506
No comments:
Post a Comment