பிட்டு வீடியோ புகழ் நித்தியானந்தர், எழுத்தாளர் ஒருவருக்கும், பத்திரிகை ஒன்றுக்கும் 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்ததாக கேள்விப்பட்டோம். இன்னும் யார் யாருக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு இதுபோன்ற வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிற தகவல் முழுமையாக தெரியவில்லை.
நித்யானந்தாவுக்கு என்ன மானம் இருக்கிறது, அதற்கு இப்போது நஷ்டம் வந்துவிட்டது என்ற குழப்பம் ஏற்படுகிறது.
தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ துண்டுப்படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறையும் கூட உறுதி செய்துவிட்டதாகவே தெரிகிறது. மோசடியை வெளிக்கொணர்ந்தவர்களுக்கு மோசடியாளன் மானநஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பும் கொடூரம் இந்த நாட்டில் மட்டும்தான் நடக்கும்.
சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும், ஊடகங்களுக்கும் தார்மீக ஆதரவு கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
நித்யானந்தரின் மோசடிகளை அறிந்துகொள்ள சாருநிவேதிதா எழுதிய 'சரசம், சல்லாபம், சாமியார்' நூலினை வாசிக்க பரிந்துரைக்கிறேன். வெளியீடு உயிர்மை. இணையம் மூலமாக இந்த நூலை இந்தச் சுட்டியை சொடுக்கி வாங்கலாம்.
http://www.luckylookonline.com/2011/01/flash-news.html?utm_source=twitterfeed&utm_medium=twitter
No comments:
Post a Comment