Monday, August 8, 2011

RANJITHA' COMPLAINT: PROCEEDINGS STAYED லெனின் கருப்பன் வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை

ஓசூர்: நித்யானந்தாவின் முன்னாள் ஓட்டுனரும், சீடருமான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் மிக நெருக்கமாக உள்ள கிளுகிளு படுக்கை அறைக் காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என்றும், பெண்களை அவமானப்படுத்தும் வகையில் இக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனாலும், இந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சியில் திட்டமிட்டு ஒளிபரப்பியதாக நடிகை ரஞ்சிதா குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், தன்னை லெனின் கருப்பன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, லெனின் கருப்பனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் முறையிட்டார்.

இதன் பேரில், லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/08/08/karnataka-hc-stays-trial-ranjitha-case-against-lenin-aid0176.html#cmntForm


Proceedings stayed
 
The High Court on Thursday stayed further court proceedings against Lenin Karuppan, the complainant in the sex scandal involving self-styled godman Nithyananda.

A lower court in Ramanagara had taken cognisance of offence against Lenin and others, based on the private compliant filed by actor Ranjitha, accusing the former car driver of Nithyananda, and his two associates, of extortion and acts intended to insult the modesty of women.

The three accused, as per the private compliant by the actor, are charged under the Section 354, 384, 506 and 509 of the IPC. Lenin had approached the high court challenging the action of the Ramanagara court. 
http://www.deccanherald.com/content/181735/clear-buildings-swds-month-hc.html

லெனின் கருப்பன் மீதான விசாரணைக்கு தடை

பெங்களூர்,ஆக.7 - நித்யானந்தாவின் முன்னாள் ஓட்டுனரும், சீடருமான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகளை புனைந்து தொலைக்காட்சியில் செய்திகளை பரப்பியதாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் லெனின் கருப்பன் மீது ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் ரஞ்சிதா மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து லெனின் கருப்பனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் லெனின் கருப்பன் முறையிட்டார்.
http://www.thinaboomi.com/2011/08/07/5466.html

நித்யானந்தா பீடம் நடத்திய பட்டினி போராட்டத்தில் ஐஸ்கிரீம், ஸ்நாக்ஸ் சப்ளை

சென்னை : நித்யானந்த தியான பீடம் சார்பில் ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் எதிரில் நேற்று நடந்தது. தியான பீடத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் 20 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது.
அங்கிருந்த ஒரு மரத்தில் ஆணி அடித்து நித்யானந்தா போட்டோ மாட்டியிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக வெளியே சென்றனர்.

அருகே உள்ள கடைகளுக்கு சென்று வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் ஆப்பிள், ஆரெஞ்சு ஜூஸ் குடித்து விட்டு, மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்து கொண்டனர். பட்டினி போராட்டத்தில் அவ்வப்பொழுது தண்ணீர் பாட்டில், ஐஸ் கிரீம், ஸ்நாக்ஸ் வகைகள் வினியோகிக்கப்பட்டது. அவற்றை சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் இறுக்கமான முகத்துடனேயே அமர்ந்து இருந்தனர்.

அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெரிந்தது. பேசிய ஒவ்வொருவரும் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள் தொடர்பாகவே பேசினர். அப்போதெல்லாம் பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டு சிரித்தனர். ஒரு சிலர் முகம் சுழித்தனர். மதியத்திற்கு பிறகு பலர் ஓரமாக சென்று தூங்கி விட்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒருவர் கூட வரவில்லை. பாதுகாப்புக்கு போலீசார் மட்டுமே வந்திருந்தனர்.

அந்த வழியாக நடந்து சென்றவர்களில் சிலர் வேடிக்கை பார்த்தனர். தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரித்தபடியே கலைந்ததை மட்டுமே காண முடிந்தது. வேடிக்கை பார்ப்பவர்கள் பார்வையில் படுவதை தவிர்க்க, பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டனர்.

ரஞ்சிதா வராததால் கூட்டம் இல்லை

போராட்டத்திற்கு நடிகை ரஞ்சிதா வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் வந்திருந்தனர். ‘‘ரஞ்சிதா வருவாரா?’’ என்று கூட்டத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். ஆனால், தியான பீடம் நிர்வாகிகள் பதில் ஏதும் கூறவில்லை. ரஞ்சிதா வரவில்லை என்று தெரிந்ததும், அவர்கள் சென்று விட்டனர்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2814

இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்


இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்
சென்னை, ஆக. 7-
நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. 
இந்து மதத்துக்கு எதிராக அவதூறு செய்தி: நித்தியானந்தா சீடர்கள் இன்று உண்ணாவிரதம்சென்னை, ஆக. 7-நித்தியானந்தா-ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் டெலிவிஷனில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் டெலிவிஷன், பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா, தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச சி.டி.யை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது.
 ----------------------------------------------------------------------------------------------------------
கருத்து  Read Comments;

Sunday, August 07,2011 07:31 PM, ஊமையன் said:
நித்தி பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது செருப்பால் அடிப்பார்கள் என்று அழுத்தமாக சொல்கிறார், இவன் எல்லாம் ஒரு சந்நியாசியா அப்ப ரமண மகரிசி , ராமக்ரிச்னர் எல்லாம் யார் ? இவனை இன்னும் வெளியில் நடமாட விட்டு அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது .
On Sunday, August 07,2011 08:22 PM, அருன்மோகன் said :
அட லூசு! ரமணரையும், ராமகிரிஷ்ணரையும் யாரும் இவள்ளவு இழிவுபடுதலையே!
----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 05:36 PM, அன்பு valar said:
ஹீரோ - வை காணோம்
Sunday, August 07,2011 05:02 PM, rama said:
கீழ்க்கண்ட comments-ஐ பார்க்கும் பொது, மத சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 11:10 PM, சுப்பு said:
பணம் இருந்தால் என்ன நாடகம் வேண்டுமானாலும் நடத்தலாம்! 
Sunday, August 07,2011 05:36 PM, அன்பு valar said:
ஹீரோ - வை காணோம்
----------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 05:02 PM, rama said:
கீழ்க்கண்ட comments-ஐ பார்க்கும் பொது, மத சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 04:47 PM, நாஞ்சில் நசீர் 870 said:
உண்ணாவிரதம் இருப்பதில் தவறில்லை..! இந்து தர்ம சக்தி இயக்கம் என்ற பெயரில் நடைபெறுவது ஏற்புடையதல்ல..! காரணம் இந்து தர்மத்தில் எதிலும் நித்யானந்த போன்ற போலி சன்னியாசிகளின் காம லீலைகளை தர்மமாக குறிப்பிடவில்லை..!
On Sunday, August 07,2011 06:45 PM, Ilakkuvanar Thiruvalluvan said :
உண்மை.உண்மை.உண்மை.
On Sunday, August 07,2011 10:07 PM, Prabhakar said :
Muttal nethi oziga
------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 04:27 PM, சால்னா said:
வர வர சாமியார்கள் எல்லாம் அரசியல்வாதியா ஆயகிட்டு இருக்காங்க...உண்ணாவிரதம், போராட்டம், கச முசா....
--------------------------------------------------------------------------------------------------------------------------------.
Sunday, August 07,2011 03:32 PM, கைப்புள்ள said:
வருத்தப்படாத வாலிபர் சங்கம்- வம்பிழுத்தான் பட்டி இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டிருக்கு. அது அவனுங்க விதி. பாவம் இந்த ஜனங்க !! உண்ணா விரதமா இது உள்ள ஒரு ஓட்டலே நடந்து கிட்டிருக்கு. !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 03:19 PM, ravi said:
சட்டம் மற்றும் நீதிதுறை ஒழுங்காக செயல்படததால் உள்ளே இருக்க வேண்டியவர்கள் இப்படி போராட்டங்களை நடத்தினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, August 07,2011 03:12 PM, ravi said:
பொலிஸ் என்கவுண்டர் என்றது இருக்கு நித்தியானந்தா.....கவனம்.
------------------------------------------------------------------------------------------------------------------------?
Sunday, August 07,2011 03:04 PM, ராஜா said:
அடியே மாப்புளைகளா, நித்தி-ரஞ்சி ஊரே அறிஞ்ச விஷயம் .முழு பூசனிக்காய சொத்துல மறைக்க பார்குரீங்கலாக்கும்
------------------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, August 07,2011 03:04 PM, சாது said:
இது தான் "உண்மை தூங்கும் நேரம் பார்த்து பொய்கள் போடும் ஆட்டம் "......
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .
 http://www.maalaimalar.com/2011/08/07145136/Libel-news-against-the-Hindu-r.html

Saturday, August 6, 2011

RANJITHA; COMPLAINT PROCEEDINGS STAYED

Proceedings stayed
The High Court on Thursday stayed further court proceedings against Lenin Karuppan, the complainant in the sex scandal involving self-styled godman Nithyananda.

A lower court in Ramanagara had taken cognisance of offence against Lenin and others, based on the private compliant filed by actor Ranjitha, accusing the former car driver of Nithyananda, and his two associates, of extortion and acts intended to insult the modesty of women.

The three accused, as per the private compliant by the actor, are charged under the Section 354, 384, 506 and 509 of the IPC. Lenin had approached the high court challenging the action of the Ramanagara court. 
http://www.deccanherald.com/content/181735/clear-buildings-swds-month-hc.html

Friday, August 5, 2011

நித்யானந்தாவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

சேலம் : தவறான அறிவுரைகள் வழங்கி வரும் நித்யானந்தாவை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாளை கல்வி உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது.

மாநாட்டில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவும், சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறை படுத்தவும், தனியார் பள்ளி அருகே உள்ள ஏழை குழந்தைகளுக்கு 25 % இடங்களை அப்பள்ளிகள் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.

 குற்ற வழக்கில் கைதான நித்யானந்தர் மக்களை தவறான பாதைக்கு திருப்புகிறார். இவரின் உபதேசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாமியார்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். . இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.

http://wap.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2695

Monday, August 1, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது. பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார். புத்தகங்கள் போட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். கதவைத் திற காற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

உடல் உழைப்பில்லாதவர்கள், மனம் சோர்ந்தவர்கள், குடும்பத்தோடு, குழந்தைகளோடு வீட்டில் சரியாகப் பேசாதவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள், முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத ரகத்தினர், சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன். அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது. பணமும் சேர்ந்தது. கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச்சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு. கூடவே தியானம், யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன. ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின. உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார். சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது. மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.
ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி. டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. நக்கீரன் பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான். அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரமம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.
கடந்த ஜூலை 13 அன்று எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து, தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யானந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை; அது முழுக்க போலியானது; என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது; இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார். இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை. ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார். (பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: www.periyar.tv)
நித்யானந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது. youtube இணைய தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள Forensic Science Laboratory, Govt. of NCT of Delhi ஆய்வு மய்யம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால், அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை - மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யாகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினார்.
பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார். ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர். தவளை போலத் தவ்வினார்கள். இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்யானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்.. என்றார். ஆனால், சர்வசக்தி உள்ளதாகவும், தமக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்றும் புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்றும் பேட்டியில் பீற்றிக்கொண்ட நித்யானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.
குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை. சிறிது நேரம் குதித்த அந்த பக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவனங்கள் வர இருக்கின்றன. அவர்களின் முன்னிலையிலும், பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார். எந்த நிறுவனத்தினரும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தகவலை நித்யானந்தா தரப்பும் அறிவிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். கடந்த 15ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றேன். அப்போது, நித்யானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்குப் பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனைப் போன்றது. உணர்வுகள் 6 வயதுச் சிறுவனைப் போன்றது. எனவே, எனது சக்தி அபரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்யானந்தா போலிச் சாமியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்குப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யோகாசனங்களில் பல வகை உண்டு. அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி. இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி. யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை. அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப் பேர்வழிக்கு எப்படிச் சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா? வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்க முடியுமா? இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?
http://www.unmaionline.com/new/24-unmaionline/unmai2011/aug-01-15/357-


Im Not Male or Female - Nithyananda _telugutouch.com



http://www.youtube.com/watch?v=owoDXBofXvI&feature=player_embedded#at=20

இந்து மதத்தில் இருந்து நித்தியானந்தா ஓடிவிட வேண்டும்

August 1st, 2011,
Image

இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளை ஞர் அணி சார்பில், சுவாமி நித்யானந்தாவை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில செயலாளர் ஞானசம்பந்தன் பேசியதாவது: இந்து மதத்தை விட்டு நித்யானந்தா வெளியேற வேண்டும். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக்கொண்டு இந்துமத தாய்மார்களையும், பெண்களையும் அந்தரத்தில் பறக்கவிடுகிறேன் என மோசடி செய்து வருகிறார்.

அவரது மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம்.

உண்மையான இந்து மதத்தின் ஆன்மீக வாதி தனது பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. தனது பிரசாரம் மூலம் நித்யானந்தா சம்பாதித்த சொத்துகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை சுவாமி நித்யா னந்தா என்று அழைப்பதை விட காதல் மன்னன் நித்யா னந்தா என்ன அழைப்பதே பொருத்தமானது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய வேண்டும். இந்து மதத்தில் இருந்து அவர் ஓடிவிட வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் ஞான சம்பந்தன் கூறினார்.

http://www.padukai.com/topic26630.html

பரமஹம்சர் என்பதை நீக்காவிட்டால் நித்தியானந்தா ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டம்




இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் பேசியதாவது: போலி சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய வேண்டும். அவரை தமிழகத்துக்குள் வர விட மாட்டோம். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நித்தியானந்தா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவியை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

ஆன்மிகத்தில் ஈடுபட போகிறேன்; குண்டலினி யோகம் மூலம் ஆகாயத்தில் பறக்க வைக்கப் போகிறேன் என்று கூறி, இந்து பெண்களை கேலி கூத்தாக்கியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. ஆன்மிக ஒளி ராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் இருப்பதைப்போல், தனது பெயருக்கு பின்னால் நித்தியானந்த பரமஹம்சர் என்று போட்டுள்ளதை நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரது ஆசிரமத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு ஞானசம்பந்தம் கூறினார்.

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2419