http://www.dinakaran.com/highdetail.aspx?id=9504&id1=13
பெங்களூர் : சாமியார் நித்யானந்தா வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் நடிகை ரஞ்சிதா சென்னை வந்து விட்டாரா என்பதை அறிய, அவருடைய வீட்டை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கண்காணிக்கின்றனர்.
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவாகி விட்டார். மோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு புகார்களுக்காக கைது செய்யப்பட்டு 52 நாட்கள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நித்யானந்தா, சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ரஞ்சிதாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால், அவரிடம் வாக்குமூலம் பெற கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முயன்று வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீஸ் படை, வெறும் கையுடன் திரும்பியது.
இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு கடந்த மாதம் ரஞ்சிதா அனுப்பிய பதிலில், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாகவும், சில மாதங்களில் நேரில் வந்து வாக்குமூலம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது பற்றி கர்நாடக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரஞ்சிதா சென்னை வந்துள்ளது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவர் வருகையை கண்காணிக்க ஏற்கனவே குழு அமைத்துள்ளோம். அதனிடம் இருந்து தகவல் வந்தால் மட்டுமே, வாக்குமூலம் பெற சென்னை செல்வது பற்றி முடிவு செய்யப்படும்’ என்றார்.

No comments:
Post a Comment