சென்னை, ஜூன். 5-
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்றார். பல்வேறு மாநிலங்களிலும் இவரது ஆசிரம கிளைகள் பரந்து விரிந்து கிடந்தன.
புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நித்யானந்தா சாமியாரும், பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவும், படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நித்யானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது வழக்கம்போல ஆசிரம பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக மாநில ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ராம்நகர் கோர்ட்டில் ரஞ்சிதா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நித்யானந்தாவுடன் நான் இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ள வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. மாஜிஸ்திரேட்டு ரூபா, லெனினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இது தொடர்பாக லெனின் கூறியதாவது:-
கோர்ட்டு சம்மனை நான் சட்டரீதியாக சந்திப்பேன். நித்யானந்தா ஆசிரமம் சார்பில் என் மீது 43 பேர் மொத்தமாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என் மீது தொடரப்பட்டுள்ள 8 வழக்குகளையும் நான் எதிர்கொண்டு வருகிறேன். இதில் 2 பெண்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ ஆதாரம் உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது. ரஞ்சிதா என் மீது தொடர்ந்துள்ள இந்த வழக்கில் இருந்தும் நான் நிச்சயம் வெளிவருவேன்.
இவ்வாறு லெனின் கூறினார்.
No comments:
Post a Comment