மதுரை ஆதீனத்திற்கு எதிராக 2 வழக்குகள்
தினமலர் – வெ, 1 பிப்., 2013
மதுரை:
மதுரை ஆதீனத்திற்கு எதிராக, மதுரை முதன்மை சப்-கோர்ட்டில், நித்யானந்தா
தரப்பிலிருந்து 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீன சொத்துக்களை
அபகரிக்க, நித்யானந்தாவும், அருணகிரிநாதரும் முயற்சிக்கின்றனர்; ஆதீன
சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும், என இந்து அறநிலையத்துறை ஆணையர்,
மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு செய்திருந்தார்.இதற்கு ஆதீனம் தரப்பில்,
நித்யானந்தா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பதிவு செய்த
மதுரை ஆதீனம் அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்; மடத்திற்குள்
நித்யானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும், என
தெரிவித்திருந்தார்.நித்யானந்தா, தன்னை நீக்கம் செய்யும் உரிமை
ஆதீனத்திற்கு இல்லை, என கூறியிருந்தார். இது தொடர்பாக 3 வழக்குகள் ஒரே
கோர்ட்டில் நடந்து வருகின்றன.இந்நிலையில், நேற்று நித்யானந்தா தரப்பில்
மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதில்,என்னை இளைய ஆதீனமாக
நியமித்த பின், பொறுப்பில் இருந்து நீக்கியதாக அறிவிக்க அதிகாரம் இல்லை.
இளைய ஆதீனம் என்ற முறையில் பூஜை செய்ய தடை விதிக்கிறார். என்னை மடத்தில்
நுழைய அனுமதிக்க வேண்டும், என ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மற்றொரு
வழக்கில், தம்பிரானாக திருச்சிற்றம்பலத்தை நியமிக்கும் உரிமை ஆதீனத்திற்கு
இல்லை. அதை செல்லாது என அறிவிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி
குருவையா வழக்கை பிப்., 15க்கு தள்ளிவைத்தார்.
http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%86-%E0%AE%A9-%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E-%E0%AE%B0-000400791.html
No comments:
Post a Comment