Friday, March 5, 2010

போலிச் சாமியார் நித்யானந்தாவுக்கு கடும் தண்டனை தரமுடியும்! - வக்கீல்கள் வெள்ளிக்கிழமை, மார்ச் 5, 2010, 18:13[IST]

சென்னை: போலிச்சாமியார் நித்தியானந்தன் செக்ஸ் லீலைகளுக்கு தண்டனை தர முடியாவிட்டாலும், அவருக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் மோசடி, மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து பெரும் சொத்து குவித்தது, மதத்தை இழிவுபடுத்தியது என பல்வேறு மோசடிகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கூட பெற்றுத் தர முடியும், என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

நித்யானந்தா மீது தமிழகம் [^] மற்றும் கர்நாடகத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் மீது யாரும் செக்ஸ் புகார் கூறாததால், அவர் தப்பித்துக் கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள்தண்டனை வரை பெற்றுத் தர முடியும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்ரமேஷ் கூறுகையில், "இப்போது நித்யானந்தம் மீது 420, 295 பி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, மத உணர்வுகளைப் புண்படுத்தியது போன்ற பிரிவுகள் இவை.

இவை தவிர, அவர் மீது சமூக அமைதியைக் கெடுத்ததற்காகவும் அரசு நேரடியாக நடவடிக்கை [^] எடுக்க முடியும். குண்டர் சட்டத்தில் கூட அவரை உள்ளே தள்ளலாம் அரசு நினைத்தால். ஆனால் செய்வார்களா தெரியவில்லை..", என்றார்.

வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "சாமியாராக இருப்பவர்கள் இல்லறத்தில் ஈடுபடகூடாது என்று எந்த சட்டமும் கூறிவில்லை. ஒரு மைனர் பெண்ணிடம் அவள் விரும்பியோ, விரும்பாமலோ உறவு கொண்டால் குற்றம் [^].

ஆனால் வயதுக்கு வந்தவர்கள் விரும்பி உறவு வைத்துக் கொண்டால் யாராலும் கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை.

நித்யானந்தா விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கம் ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட ரஞ்சிதா புகார் செய்யாத பட்சத்தில் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனால் மோசடி, சமூக அமைதியைக் கெடுத்தது போன்ற பிரிவுகளில் தகுந்த ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் கடுமையான தண்டனை வாங்கித் தரமுடியும்", என்றார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில், "ஊடகங்களின் செய்தி மட்டுமே முழுமையான ஆதாரமாகிவிட முடியாது என்றாலும், குறிப்பிட்ட சம்பவம் உண்மையில் நடந்திருந்தால், அதற்கான ஆதாரங்களுக்கு வலு சேர்க்க ஊடக செய்திகளும் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன.

நடந்தது என்ன என்பதை முழுமையாகச் சொல்ல பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த வகையில் இப்போது வந்துள்ள செய்திகள் [^] மற்றும் கையிலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம்.

சாட்சிகள் வலுவாக அமைந்தால் நித்யானந்தம் கம்பி எண்ணுவதைத் தவிர்க்கவே முடியாது..", என்றார்
http://thatstamil.oneindia.in/news/2010/03/05/legal-opinion-on-nithyananda-case.html

No comments:

Post a Comment