பெங்களூர், பிப். 25-
நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து வெளியான ஒரு வீடியோ காட்சி காரணமாக கடந்த ஆண்டு சுவாமி நித்யானந்தா கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெற்று வெளியில் வந்த அவர் தற்போது பெங் களூர் மைசூர் சாலையில் பிடதியில் இருக்கும் தியான பீடத்தில் தங்கி இருந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நித்யானந்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தியான பீடத்துக்கு வரும் பெண் பக்தைகளிடம் ஒரு (sex)ஒப்பந்தம் செய்யப்படுவதுண்டு. இந்த ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தாவின் மனைவி மாசாதனந்தா கையெழுத்து போட்டுள்ளதாக தெரிகிறது. மாசா தனந்தாவின் உண்மையான பெயர் ஜமுனா. ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டு இருப்பது மாசாதனந்தா எனப்படும் ஜமுனாதானா என்பதை உறுதி செய்து கொள்ள குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் நேற்று மதியம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடத்துக்கு சென்றனர். அப்போது தியான பீடத்தில் இருந்த நித்யானந்தாவின் சீடர்களுக்கும், குற்றப்பிரிவு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் நித்யானந்தா சீடர் தயானந்தா கை முறிந்தது.
இதற்கிடையே குற்றப் பிரிவு போலீசார் தேடி வந்த மாசாதனந்தா என்ற ஜமுனா காரில் ஏறிச்சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் நித்யானந்தா பீடத்தில் விசாரணைக்கு சென்றபோது விசாரணைக்குரிய பெண்ணை காரில் கடத்தி சென்று விட்டனர். ஆசிரமத்தில் உள்ள 3 பேர் எங்கள் கடமையை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று கூறி இருந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பிடதி போலீசார் தியான பீட ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சச்சிதானந்தா, தயானந்தா, சாந்தி மயானந்தா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கைதான 3 பேரும் தியான பீட நிர்வாகிகள் ஆவார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட விதத்துக்கு தியான பீடம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரங்கள் தொடர்பாக சுவாமி நித்யானந்தா இன்று பிற்பகல் பிடதியில் உள்ள தியான பீடத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளிக்க முடிவு செய்துள்ளார்.
http://www.maalaimalar.com/2011/02/25150217/bangalore-nithyananda-sedar-3.html
No comments:
Post a Comment