சேலம் : தவறான அறிவுரைகள் வழங்கி வரும் நித்யானந்தாவை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாளை கல்வி உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது.
மாநாட்டில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவும், சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறை படுத்தவும், தனியார் பள்ளி அருகே உள்ள ஏழை குழந்தைகளுக்கு 25 % இடங்களை அப்பள்ளிகள் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.
குற்ற வழக்கில் கைதான நித்யானந்தர் மக்களை தவறான பாதைக்கு திருப்புகிறார். இவரின் உபதேசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாமியார்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். . இவ்வாறு கொளத்தூர் மணி கூறினார்.
http://wap.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2695

No comments:
Post a Comment