மாற்றம் செய்த நேரம்:5/5/2012 10:40:29 AM
மதுரை: பாலியல் குற்றச் சாட்டு உள்ள நபரை ஆதீனமாக தேர்வு செய்யக்கூடாது என மார்க் சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று ஜி.ராமகிருஷ் ணன் அளித்த பேட்டி: மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வரும் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை எதிர்ப்பு பிரசாரம் நடைபெறுகிறது. மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கக் கூடாது. இதே போன்று மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கக் கூடாது. உள்ளாட்சி நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக நிதி ஆணையக்குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இக்குழுவின் அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் வைக்கவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொடர்பாக நாளை சென்னையில் கூடும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பொதுவாக தமிழகத்தில் உள்ள மடங்களில் ஆதீனத்தின் வாரிசாக சிறுவயதில் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். அதன் பின் அவர் அந்தப் பதவிக்கு வரமுடியும். ஆனால் மதுரை ஆதீனத்தில் முரண்பாடாக உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை ஆதீனமாக நியமித்து இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். ஒரு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்ததைவிட மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், விலைவாசி உயர்வு மூலம் அவர்களிடமிருந்து பறித்ததுதான் அதிகம். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=11610
No comments:
Post a Comment