நித்தியின் பவுர்ணமி பூஜை: ஆர்ப்பாட்டம்
பிரபல நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போல வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நித்யானந்தா திடீர் என்று தலைமறைவானார்.
இமாசலபிரதேசத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 50 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த நித்யானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் தற்போது பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தியானத்தை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் பவுர்ணமி பூஜைக்கு நித்யானந்தா பக்தர்களை அழைக்கும் வகையில் அவரின் படத்துடன் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பழைய கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் போஸ்டர்கள் நேற்று ஒட்டப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தலித் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வக்கீல் முத்துசாமி தலைமையில் நேற்று சேலம் பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அங்கு நித்யானந்தாவிற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். மேலும் நித்யானந்தாவின் போஸ்டர்களை கிழித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை கைது செய்தனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=36399

No comments:
Post a Comment