சனி, 16 பிப்ரவரி 2013 16:40
சென்னை, பிப்.16- சென்னை உயர்நீதி மன்றத்தில் திருவண்ணா மலை நித்தியானந்தா பீடத்தின் மேலாளர் நித் திய பரமானந்தர் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார். அதில், நித்தியா னந்தா பீடம் ஒரு வழி பாட்டிடமல்ல. அங்கு மதச் சடங்குகள், பூஜை கள் எதுவும் நடத்தப்படு வதில்லை.
எனவே இந்து சமய அறநிலையத்துறை சட்டம் எதுவும் எங்கள் பீடத்தைக் கட்டுப்படுத் தாது. ஆனால் எங்கள் பீடத்தை கையகப்படுத் துவதற்காக கடந்த அக் டோபர் 11 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நோட்டீசு அனுப்பியுள் ளார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அங்கு இந்து ஆகம விதி களும் பின்பற்றப்பட வில்லை. சில இந்து கட வுள்களின் சிலைகள் அங்கு இருப்பதை வைத்து அது இந்து மதத்தை பின்பற்றும் சமய பீடம் என்று கூற முடியாது. எனவே திருவண்ணா மலையில் உள்ள நித்தி யானந்தா பீடம், இந்து சமய அறநிலை யத்துறை யின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறி உதவி ஆணையரின் நோட் டீசை ரத்து செய்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் இந்து சமய அற நிலையத்துறை ஆணை யர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள் ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
இந்து கடவுள்களின் சிலைகள் மட்டும்தான் அந்த பீடத்தில் இருந் தன. அறநிலையத்துறை நோட்டீசு அனுப்பிய பிறகுதான் அங்கு புத்தர் சிலைகள் வைக்கப்பட் டன. அந்த பீடத்தில் யோகா, தியானம் ஆகிய வற்றுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்து மதத்துக்கு உரித் தான பாரம்பரியமாகும். அங்கு நடக்கும் பூஜை களை இந்து அர்ச்சகர் களை சம்பளத்துக்கு அழைத்து அவர்கள் மூல மாகவே நடத்துகின்ற னர்.
பவுர்ணமி காலத்தில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த பீடத்தில் அன்ன தானம் வழங்கப்படு கிறது. இதுவும் இந்து முறைப்படியான விஷ யம்தான். நித்தியானந்தா பீடம், இந்து சடங்கு களை பின்பற்றும் மடம் என்பதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசார ணைக்கு வருகிறது
http://www.viduthalai.in/component/content/article/74-government/54958-2013-02-16-11-11-56.htmlருகிறது
நித்யானந்தா ஆசிரமத்துக்கு அனுப்பிய "நோட்டீஸ்' ரத்து:ஐகோர்ட்டில் அரசு அப்பீல் மனு தாக்கல்
சென்னை:திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா ஆசிரமத்துக்கு, இந்து சமய அறநிலையத் துறை அனுப்பிய, "நோட்டீஸ்' ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு, அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கிரிவலப் பாதையில், நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு, கடவுள் சிலைகள் அமைத்து, தினமும் பூஜை நடந்து வருகிறது. "இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், ஆசிரமத்தை கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி, நித்யானந்தா தியான பீடத்தின் மேலாளர், நித்ய பிரானநந்தா, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு, "நித்யானந்தா தியான பீடம், வழிபாட்டு தலம் அல்ல என்பது, அறக்கட்டளை ஆவணம் மூலம் தெரிய வருகிறது. தியான பீட அறக்கட்டளையை, கையகப்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்ட, நோட்டீஸ் அடிப்படை ஆதாரமற்றது. இந்து சமய அறநிலையத்துறை, இதை கையகப்படுத்த முடியாது. எனவே, நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு:
இந்து சமய அறநிலையத் துறையின், உதவி கமிஷனர் பிறப்பித்த நோட்டீசை, தனி நீதிபதி ரத்து செய்திருக்கக் கூடாது. ஆசிரமத்தில், இந்து மத கடவுள் சிலைகள் உள்ளன. நோட்டீஸ் பெற்ற பின், அங்கு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டது. யோகா, தியானத்தை பரப்புவது தான், தியான பீடத்தின் நோக்கம் என, கூறப்பட்டுள்ளது.
இந்து மதத் தத்துவத்தில், யோகாவும் ஒரு அம்சம். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. பவுர்ணமி தினத்தன்று அன்னதானம் வழங்குவது, பொதுமக்களை அழைத்து சிலை வழிபாடு நடத்துவது, இந்து மதத்தின் அம்சங்களாகும். இந்து மதத்தின் பாரம்பரியப்படி, அங்கு பூஜைகள், சடங்குகள் நடத்தப்படுகிறது. இதற்காக, அர்ச்சகர் உள்ளார். இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, கடந்த மாதம், 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த அப்பீல் மனு, அடுத்த வாரத்தில், விசாரணைக்கு வருகிற

http://www.dinamalar.com/news_detail.asp?id=649231#postcomm
No comments:
Post a Comment