சனி, 5 மே 2012
மதுரை ஆதீனம் அண்மையில் இளைய ஆதீனமாக செக்ஸ் புகழ் நித்யானந்தாவை நியமித்தார். இதற்கு, அரசியல் கட்சகிள், பல்வேறு இந்து அமைப்புகள், மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நித்யானந்தா நியமத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. பலரது எதிர்ப்புக்கு ஆளான நித்யானந்தா, மதுரை ஆதீனம் இருவரும் இது பற்றி கவலைப்படவில்லை.
மதுரை ஆதீனத்தின் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். முன்பு அனைத்து சொத்துகளும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கண்காணிப்பில் அந்த சொத்துக்கள் உள்ளன.
குரு மகா சன்னிதானம்தான் அனைத்து நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களை கவனித்து வருகிறார். இந்து சமய அறநிலைய சட்டப்படி, மகா சன்னிதானம்தான் அறங்காவலராக உள்ளார். 1,400 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டும் அந்த சொத்துகளை அவர்தான் நிர்வகிக்கிறார்.
பாரம்பரிய நடைமுறைகளை எல்லாம் தாண்டி நித்யானந்தா மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலும், கர்நாடகாவிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் அவர் சிக்கியுள்ளார். உலக பிரசித்தி பெற்றுள்ள பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள ஒரு மடத்தின் தலைமைக்கு, பல குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் வர முடியுமா? என்பது கேள்வி.
எனவே ஆதீனத்தின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதை பாதுகாக்க வேண்டிய கடமை இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாகும்.
இப்படி பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீனத்தில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மாடத்தில் 5 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
இதனால் மதுரை ஆதீனம், நித்யானந்தா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரித்துறையின் அதிரடி சோதனை மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1205/05/1120505007_1.ht
m
m
No comments:
Post a Comment