Posted on 15.2.13
நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் ஆஜரானார், நித்தியானந்தா. திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 75 கூடாரங்களில், சினிமா செட் போல பளபளத்தது நித்தியின் சுமார் 100 பக்தர்களை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து இறக்கி அசத்தினார் நித்தி. நட்சத்திர ஹோட்டலுக்குக் குறைவில்லாத வசதிகளுடன் இருந்த நித்தியின் கூடாரத்தில், கடுமையான கட்டுக் காவல். அனுமதி இன்றி உள்ளே யாரும் நுழைய முடியாது.
ராஜக் குளியல் செய்வதற்காக நித்தி, ஆளுயர ரோஜா மாலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்துக்காக செட்டப் செய்யப்பட்டிருந்த ரதத்தில் நித்திக்காக வெள்ளி சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்தது.
நித்திக்குப் பாதுகாப்பாகத் துப்பாக்கி ஏந்திய இரு கமாண்டோக்களும் உடன் வந்தது அங்கு வந்திருந்த சாதுக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யார் இந்த வி.ஐ.பி. சாது என்று அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொண்டனர்.
சரி.. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு கொடுத்தது யாரு? மத்திய அரசா? உ.பி. அரசா ?
நித்தி வட்டாரங்களில் விசாரித்தபோது, தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றுக்கு பணம் கொடுத்து பெறப்பட்ட பாதுகாப்பு என்றார்கள். இதற்கு அந்த மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏஜென்சியின் யூனிபார்மில் இல்லாமல், கமாண்டோ பாணியில் உடையணிந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது, நித்தி விடுத்த கோரிக்கையாம்! (அந்த டிரெஸ்ஸூக்கு மேலதிக கட்டணம் உண்டு)
அட, இப்படியொரு செட்டப்பில் மதுரை வந்து, அருணகிரியாரை மிரள வைக்கலாமே!
http://www.cinekolly.com/2013/02/blog-post_2224.html

No comments:
Post a Comment