மார்ச் 01,2013,06:04 IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டிருந்த, 1,008 லிங்கங்கள் அகற்றப்பட்டது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அன்னதானம், மீண்டும் துவங்கப்பட்டது.
திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 1,008 லிங்கம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் சிறப்பு பூஜை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நடந்தது.
இதை, அறநிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டது. தகவல் அறிந்த ஆஸ்ரம நிர்வாகம், உடனடியாக அங்கிருந்த, லிங்கங்கள் முழுவதும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டன. அங்கிருந்த சிலைகளை அகற்றி, அங்குள்ள ராட்சத கன்டெய்னரில் அடுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
போலீஸார், "வழக்கு நடப்பதால், அங்கிருந்து லிங்கங்களை அகற்றக்கூடாது' எனக்கூறி, தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். தற்போது, நித்தியானந்தா ஆஸ்ரமத்தை, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்த, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து, லிங்கம் முழுவதும், பூஜை செய்யப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட லிங்கங்கள், ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரில் வைக்கப்பட்டுள்ளதா, அல்லது, வெளியில் எடுத்து செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.

No comments:
Post a Comment