திருப்பூர் : கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்தனர்.
சென்னையில் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சியை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அக்கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில், நித்யானந்தாவிடமிருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் முருகேஷ்ஜி, எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு கொடுத்தார். மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் அக்கட்சியினர் வழங்கினர். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் 29ம் தேதி (நாளை) முதல் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனஅறிவித்திருந்தோம். இந்நிலையில், கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்தது. நித்யானந்தா அருள்பீடம், பெங்களூரு என்ற முகவரியில் இருந்து வந்த அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, ‘பட்டினத்தார் வாழ்வும், வாக்கும்‘ என்ற புத்தகமும், ஜீவன் முக்தி பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் புத்தகமும் இருந்தது.
புத்தகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சீட்டில் ‘எங்களை சீண்டாதீர்கள், உங்களை அழித்து விடுவோம்‘ என எழுதப்பட்டிருந்தது. இந்த செயல் இந்து கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்தியும், இளம்பெண்களை சீரழித்தும் வரும் போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் எங்கள் போராட்டத்தை தடுக்க விடுக்கும் கொலைமிரட்டல் ஆகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, நித்யானந்தா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜ், ஒன்றிய அமைப்பாளர் ஜீவா, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2212சென்னையில் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சியை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அக்கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில், நித்யானந்தாவிடமிருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் முருகேஷ்ஜி, எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு கொடுத்தார். மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் அக்கட்சியினர் வழங்கினர். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் 29ம் தேதி (நாளை) முதல் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனஅறிவித்திருந்தோம். இந்நிலையில், கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்தது. நித்யானந்தா அருள்பீடம், பெங்களூரு என்ற முகவரியில் இருந்து வந்த அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, ‘பட்டினத்தார் வாழ்வும், வாக்கும்‘ என்ற புத்தகமும், ஜீவன் முக்தி பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் புத்தகமும் இருந்தது.
புத்தகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சீட்டில் ‘எங்களை சீண்டாதீர்கள், உங்களை அழித்து விடுவோம்‘ என எழுதப்பட்டிருந்தது. இந்த செயல் இந்து கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்தியும், இளம்பெண்களை சீரழித்தும் வரும் போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் எங்கள் போராட்டத்தை தடுக்க விடுக்கும் கொலைமிரட்டல் ஆகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, நித்யானந்தா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜ், ஒன்றிய அமைப்பாளர் ஜீவா, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment