FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Wednesday, July 20, 2011

நித்தி - ரஞ்சி அண்டப்புளுகு ஜோடிக்கு நக்கீரன் விடும் சவால்!




       ன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார், சென்னையில் ஜூலை 13-ந் தேதி பேட்டியளித்த சாமியார் நித்யானந்தா. தானும் ரஞ்சிதாவும் சேர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள்  ‘மார்ஃபிங்’(போலியாக) செய்யப்பட்டவை என்றும், இதனை வெளியிடாமல் இருப்பதற்காக தங்களை மிரட்டியதாகவும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பேட்டியளிக்க, நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய ஆத்ம பிரமானந்தா, இது தொடர்பாக நக்கீரன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

2010 மார்ச்  முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா-ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள்  பெரும் அதிர்வை உண்டாக்கின. பல்வேறு ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இந்த வீடியோ பதிவு டி.வி.டிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் கிளைகள் கொண்ட அமைப்பின் துறவியான நித்யானந்தா, இப்படி ஒரு முரண்பாடான காரியத்தில் ஈடுபட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன்தான் நக்கீரன் இதனை வெளியிட்டது. இதற்காக நக்கீரன் மீது புகார்  கொடுத்துள்ளது நித்யானந்தா ஆசிரமம்.    


அந்தப் புகாரில் நக்கீரனுடன் மேலும் சில நிறுவனத்தைச் சார்ந்தவர்களின்  பெயர் களும் இடம்பெற்றிருப்ப தோடு, நித்யானந்தா வின் வக்கீல் ஸ்ரீதர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அவரைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில், 17.2.2010 அன்று  கோவையில் நித்யானந்தா இருந்த போது, அவரைப் பார்ப்பதற்காக ஒரு துண்டு சீட்டுடன் வக்கீல் ஸ்ரீதர் வந்தார் என்றும், அவரை நித்யானந்தா பார்க்க மறுத்து விட்டார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்பின், 21.2.2010 அன்று நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய பிராணா னந்தா என்பவரிடம் வக்கீல் ஸ்ரீதர் பேசுகிறார்.


22-2-2010 அன்று நித்ய பிராணானந்தா, சதானந்தா, பக்தானந்தா ஆகியோர் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வக்கீல் ஸ்ரீதரை சந்திக்கிறார்கள். பிப்ரவரி 22-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது வக்கீல் ஸ்ரீதர் 60 கோடி ரூபாய் பணமும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் சொத்துகளும் கேட்டு பிளாக்மெயில் செய்தார் என்று நித்யானந்தா தரப்பின் புகா ரில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், வக்கீல் ஸ்ரீதர், நக்கீரனில் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டிய தாகவும், நக்கீரனும் நித்யானந் தாவை பிளாக்மெயில் செய்ததாக வும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா தந்துள்ள புகாரி லும் நக்கீரன் பிளாக் மெயில் செய்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், நக்கீரன் மீது சென்னை 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் 3.3.2010-ல் நித்யானந்தா தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், நக்கீரனுக்கு எதிராக, நித்யானந்தா சார்பில் ஆஜரானவர் இதே வக்கீல் ஸ்ரீதர்தான். வழக்கு பெண்டிங்கில் இருக்கும்போது, நித்யானந்தா சார்பில் ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப் போர்ட்டருக்கு பேட்டி தந்தவரும் இதே ஸ்ரீதர்தான். 2010 மார்ச் 4-ந் தேதி நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் பிரஸ் மீட் கொடுக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஆத்மா பிரபானந்தாவுடன் (படம் வெளி யிட்டுள்ளோம்) வக்கீல் ஸ்ரீதரும் இருந்தார்.

 மார்ச் 3-ந் தேதி தொடங்கி 19-ந் தேதிவரை தினமும் கோர்ட் டில் வாதங்கள் நடைபெற்றன. அதிலும், நித்யானந்தா தரப்பு வழக்கறிஞராக,  ஸ்ரீதர் தொடர்ந்து ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.வி. நிறுவனம் கொடுத்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, சென்னையில் போடப்பட்டிருந்த வழக்குகளையும் 19-ந் தேதியன்று, தானாகவே  வாபஸ் வாங்கிக் கொண்டது நித்யானந்தா தரப்பு. இதில், நக்கீரன் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. நித்யானந்தா தரப்பும், இந்த வழக்கு விசாரணையின்போது எந்த ஒரு தருணத்திலும், தங்களை நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாகத் தெரிவிக்கவில்லை.

ஸ்ரீதர் என்பவர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வேண்டியவ ராகவும் அவர்களுக்காக வழக்கில் ஆஜராகக்கூடியவராகவும் இருந்திருக்கிறாரே தவிர, அவருக்கும் நக்கீரனுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது நீதிமன்றத்தில் யாருக்காக ஸ்ரீதர் ஆஜரானார் என்பதிலிருந்தே தெரிகிறது.

இதன்பின் மீண்டும் 4.4.2010-ல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை நக்கீரனுக்கு எதிராகத் தாக்கல் செய்தது நித்யானந்தா தரப்பு. இந்த வழக்கு தற்போது 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கிலும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நித்யானந்தா தரப்பிலிருந்து நித்ய ஆத்ம பிரபானந்தா ஆஜராகிறார். ஒரு முறைகூட, நக்கீரன் பிளாக்மெயில் செய்த தாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலத்திலும் தெரிவித்ததில்லை. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, நக்கீரன் மீது 10 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு களை நித்யானந்தா தரப்பு தொடர்ந்தது. அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் ப்ளாக்மெயில் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.


அதுபோலவே, நடிகை ரஞ்சிதா கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் ராம்நகர்  ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த பிரைவேட் கம்ப்ளைண்ட் டில் தர்மானந்தா, ஆர்த்திராவ், வக்கீல் ஸ்ரீதர் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதி லும், நக்கீரன் தன்னை மிரட்டிய தாகக் கூறவில்லை. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 28.2.2011 அன்று ஒரு ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தார். அதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 39  பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கிலும், நக்கீரன் தன்னை பிளாக்மெயில் செய்வதாக ரஞ்சிதா தெரிவிக்கவில்லை. ஆக, முதலில் நக்கீரன் மீது நித்யானந்தா வழக்கு தொடுக்கிறார். அதில் எந்த  இடத்திலும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக சொல்லவில்லை. அடுத்து சதானந்தா பெயரில் நக்கீரன் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கிலும் நக்கீரன் பிளாக் மெயில் செய்ததாக சொல்லவில்லை. கடைசியாக நித்ய ஆத்ம பிரபானந்தா என்பவர் சதானந்தாவின் ஏஜெண்டாக நீதிமன்றத்தில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தில் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தற்போது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக பேட்டி அளித்திருப்பதுடன் அவர்கள் தரப்பிலான புகாரிலும் அதனைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பொய்க் குற்றச்சாட்டை நக்கீரன் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நித்யானந்தாவையோ ரஞ்சிதாவையோ நக்கீரன் தொடர்பு கொள்ளவேயில்லை. வீடியோ காட்சிகள் அப்பட்டமாக இருந்ததால், அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவைகூட ஏற்படவில்லை. உண்மையை  உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை வெளியிட்டோம்.

அண்ட புளுகுணி ரஞ்சிதா 12-07-2011 அன்று பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல அது, மார்ஃபிங் முறையில் சித்தரிக் கப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை(?) என்று சொல்லியுள்ளார்.


ஆனால் 14-03-2010 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் ""சுவாமி நித்யானந்தாவின் காலைப் பிடித்து விடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான் அதைத்தான் நான் செய்தேன்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். இத்தனை யையும் மறைத்து அண்ட புளுகு ஆகாச புளுகு அளவுக்கு பொய் சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா.

நித்யானந்தா-ரஞ்சிதா பேட்டி களில் நக்கீரனை நோக்கி வைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டு, தங்கள் பெயரைக் கெடுக்கும் வகையில் மார் ஃபிங் வீடியோ வெளியிடப்பட்டது என்பதுதான். நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் உண்மையானவை யா, உருவாக்கப்பட்டவையா என்பதை தடயவியல் அறிவியல் சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்துவரும்  கர்நாடக மாநில போலீசின் சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜியான ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ்.ஆர்.சரண் ரெட்டி, இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினார். மதுபான் சவுக், செக்டர் 14, ரோகினி, டெல்லி- 110 085 என்ற முகவரியில் உள்ள இந்த ஆய்வகம் தேசிய அக்ரடிஷன் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனமாகும்.

கர்நாடக சி.ஐ.டி அனுப்பிய ஆவணங்களை 27-7-10 அன்று பெற்றுக் கொண்ட தடய அறிவியல் ஆய்வகம், 12.11.10 அன்று தனது பரிசோதனை அறிக்கையை கொடுத்துள்ளது. பரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவை எவை எவை, அவற்றை எந்த முறையில் ஆய்வுக்குட்படுத்தினோம், அவற்றின் முடிவுகள் என்ன என்பது தான்  இந்த அறிக்கையின் சாராம்ச மாகும்.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கு குறியீட்டு எண் கொடுத்தது  தடய அறிவியல் ஆய்வகம்.
Exhibit-1 என்ற குறியீடு கொண்ட  வீடியோவில் இருந்த ஆணின்  முகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு Exhibit-QMFI  என்ற குறியீடும், அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்தபடி, ஸ்பை கேமராவை  அட்ஜஸ்ட் செய்யும்  பெண்ணுக்கு Exhibit-QFFI என்றும் குறியீடு கொடுக்கப்பட்டது. (ஆண் என்பது நித்யானந்தாவையும் பெண் என்பது ரஞ்சிதாவையும் குறிக்கும்).  இதுபோல,  Exhibit-2   என்ற குறியீடு கொண்ட வீடியோவிலும் இதே போல ஆண், பெண் உருவங்களுக்கு குறியீடுகள் கொடுக்கப்பட்டன.

Exhibit-3 என்ற குறியீடு கொடுக்கப்பட்ட, மோசர்பியர் டி.வி.டியில்  போட்டோக்களும் வீடியோக்களும் ஃபைல்களாக இருந்தன. அவற்றிலிருந்த பெண் உருவத்திற்கு Exhibit-SFFI எனக் குறியீடு தரப்பட்டது. (அதாவது, அந்த டி.வி.டியில் இருந்தவை  ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

Exhibit-4    என்ற குறியீடு கொடுக்கப்பட்ட மோசர்பியர் டி.வி.டியில்  இருந்த போட்டோ மற்றும் வீடியோ ஃபைல்களில் இருந்த ஆண் உருவத்திற்கு Exhibit-SMFI என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. (இந்த டி.வி.டியில் இருந்தவை, நித்யானந்தா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட  தடய அறிவியல் ஆய்வகம் உருவங்கள் பற்றிய ஆய்வு மற்றும் ஒப்பீடுகள் தொடர்பான ஆய்வில், Exhibit-QMFI  எனக் குறியிடப்பட்ட  (ஆண்) உருவமும், Exhibit - SMFI எனக் குறியிடப்பட்டுள்ள (ஆண்) உருவமும் ஒரே (ஆண்) உருவம்தான் என்பது கண்டறியப் பட்டுள்ளது. (அதாவது, ரஞ்சிதாவுடன்  வீடியோவில் உள்ள நித்யானந்தாவின்  உருவம், டி.வி.டியில் உள்ள நித்யானந்தாவின் பழைய போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.

Exhibit-QFFI  என குறியிடப்பட்டுள்ள (பெண்) உருவமும், Exhibit-SFFI என குறியிடப் பட்ட (பெண்) உருவமும் ஒரே (பெண்) உருவம் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது, வீடியோவில் நித்யானந்தாவுடன் உள்ள ரஞ்சிதா வின் உருவம், டி.வி.டியில் உள்ள  போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.)

-இதுதான் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்திய டாக்டர் சி.பி.சிங்கின் அறிக்கையாகும்.

தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் மிகத் தெளிவாக உண்மையை விளக்குகின்றன. வீடியோ காட்சிகளைக் காணும்போதே சாதாரண மக்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.  உண்மை களை உரக்கச் சொல்வதுதான் நக்கீரனின் வழக் கம். பிரேமா னந்தா, ஜெயேந்திரர் ஆகியோர் தொடர்பான புலனாய்வு களிலும் அதிர வைக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது நக்கீரன்தான். ஆன்மீகப் போர் வையில் நித்யானந்தா மேற்கொண்ட செயல்பாடு களையும் அதுபோலவே அம்பலப்படுத்தியது நக்கீரன்.


இதற்காக நக்கீரன் மீது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பாய்கிறார்கள். இந்தப் பாய்ச்சலுக்கோ பூச்சாண்டிகளுக்கோ நக்கீரன் பயந்துவிடாது.  அணிந் திருக்கும் காவி உடைக்கான கண்ணியம் சிறிதுமின்றி, அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் நிறைந்திருக்கும் அரங்கில், நித்யானந்தா காறித் துப்புகிறார் என்றால், அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் என்றுதான் அர்த்தம்.
இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்கிறார் நித்யானந்தா.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் சமூகத்தில் மதம் மற்றும் ஆன்மீகப் போர்வையில் ஒளிந்து கொண்டு மக்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் காவி உடை தரித்த இவர்களை போன்ற மோசடிப் பேர்வழிகளை அம்பலப்படுத்துவதையும் அப்புறப்படுத்துவதையும் நக்கீரன் பொழப்பாக கொண்டுள்ளதால்தான் லட்சோப லட்சம் வாசகர்களுடன் இன்றும் கம்பீர மாக பவனி வருகிறது நக்கீரன்.

இதுதான் எங்கள் பொழப்பு!

நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யா னந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள் -சட்ட வல்லு நர்கள் -தொழில்நுட்ப வல்லுநர்கள் -தடயவியல் நிபுணர்கள் -பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்க ளின் பரிசுத்தத் தன் மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?

-ஆசிரியர்

 அண்டப் புளுகு...!

நக்கீரன் மிரட்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தும் நித்யானந்தா, தனக்கு எதிராக வழக்கு தொடுத்து, ஆசிரமத்து விஷயங்களை வெளியே கொண்டுவந்த லெனின் தர்மானந்தாவிடம்  போனில் மிஞ்சியும் கெஞ்சியும் பேசியதையும் அதை லெனின் தர்மானந்தா டேப் செய்திருந்ததையும் ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.

"ரஞ்சிதாவும் நானும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம். இதிலே என்னடா தப்பு?  புரிஞ்சுக்கடா தர்மா.. தயவு செய்து புரிஞ்சுக்கடா தர்மா.

எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேண்டா... உன் உயிருக்கு யாராலயும் எதுவும் நடக்காதுன்னு ரிட்டனா எழுதித் தர்றேன் தர்மா' என்று  நித்யானந்தா அதில் பேசியிருந்ததையும் வெளியிட்டிருந்தோம்.  நித்யானந்தாவின் கெஞ்சலுக்கும் மிஞ்சலுக்கும் பணியாத லெனின் தர்மானந்தா, நக்கீரன் மூலமாக, "அந்த வீடியோவில் இருப்பதை நித்யானந்தா பொய் என நிரூபித்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்' என்று ஓப்பனாக சொல்லியிருந்தார்.

தன்னுடைய நிலையில் இப்போதும் உறுதியாக இருக்கும் லெனின் தர்மானந் தா நம்மிடம், ""வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்பது உறுதியான விஷயம். நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண் பக்தர்கள் பல பேர் இருக்கிறார்கள். சாமியார் என்ற போர்வை யில் உலவும் மோசமான வேடதாரி.  அவரை நம்பி இனி எந்தப் பெண்ணும் ஏமாறக்கூடாது என்றுதான் உயிரைப் பணயம் வைத்து ஆசிரம ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்.

கர்நாடகாவில் வழக்கு நடக்கும் நிலையில், அங்கிருந்து இங்கே வந்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்.  இந்துமதத்தின்  பாதுகாவலர் போல பாவ்லா செய்கிறார். அவர் எந்த விதத்திலும் இந்து மதத்திற்கு பயன்படவில்லை. அவர் சொல்வது எல்லாம் பொய் என்பது இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

நித்யானந்தாவை யாரும் ப்ளாக்மெயில் செய்யமுடியாது. அவர்தான் எல்லோரையும் ப்ளாக் மெயில் செய்வார். அதற்குப் பயந்து பல பெண்கள், உண்மைகளைப் பேசாமல் இருந்திருக்கிறார்கள். நித்யானந்தா பற்றி நான் அம்பலப்படுத்திய அனைத்தும் உண்மை. இப்போதும் சொல்கிறேன், அதை பொய் என்று நிரூபித்தால், தமிழக மக்கள் என்னைக் கல்லால் அடித்தே கொல்லட்டும்.''

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(6)
Name : Edwin Date & Time : 7/18/2011 7:12:54 PM
-----------------------------------------------------------------------------------------------------
சபாஷ்
-----------------------------------------------------------------------------------------------------
Name : paul santhosh Date & Time : 7/17/2011 5:47:36 PM
-----------------------------------------------------------------------------------------------------
எல்லாம் சரிதான், ஆனாலும் இந்து மதத்துக்கு எதிரா ஏதோ சதி நடக்கப்லே தோணுது. மாயாண்டி, முநியன்டின்னு பேரு வச்ச கேவலமா நேனைகிற ஊரு தானே. ஜ்ஹோன் , பால், இல்யாஸ், எப்படி பேருவட்ச நகரிகம்னு நினைக்ரங்க. அவங்க ஊர்லே அவங்க பேரு கேவலம் தான், ....
-----------------------------------------------------------------------------------------------------
Name : nadarajan Date & Time : 7/16/2011 6:14:39 PM
-----------------------------------------------------------------------------------------------------
வாழ்க வெல்க நக்கீரன் கோபால் அண்ணன் உங்கள் பனி
-----------------------------------------------------------------------------------------------------
Name : balasubramanian Date & Time : 7/16/2011 6:14:39 PM
-----------------------------------------------------------------------------------------------------
சார், ithu உங்களை மறுபடியும் ஒரு யுத்தத்திற்கு தயார் படுத்தும் நிகழ்ச்சி.எய்தவன் இருக்க அம்பை விட்டுவிடுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------
Name : ram Date & Time : 7/16/2011 3:49:47 PM
-----------------------------------------------------------------------------------------------------
well done nakkheeran
-----------------------------------------------------------------------------------------------------
: :
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=9847

No comments:

Post a Comment