7/24/2011 6:49:39
சென்னை: சாட்சிகளை அச்சுறுத்தும் நித்யானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞர் அணி சார்பில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன், பொருளாளர் கோ.சாமிதுரை, தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவி உடையில் நித்யானந்தா வேடம¢ அணிந்தவருக்கு கையில் விலங்கு மாட்டியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை துடைப்பத்தால் அடித்தனர்.
கூட்டத்தில் கலி.பூங்குன்றன் பேசியதாவது:
போலி சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரமாக கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எச்சில் சாமியார், அழுக்கு சாமியார், பீர் சாமியார், சுருட்டு சாமியார் வரிசையில் இப்போது பாலியல் சாமியார் நித்யானந்தா சேர்ந்துள்ளார். டிவிக்களும், பத்திரிகைகளும் அவரின் பாலியல் குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தின.
இதுதொடர்பான வழக்கு கர்நாடகத்தில் நடந்து வருகிறது. போலீசுக்கு பயந்து, வடநாட்டுக்கு ஓடிப்போன நித்யானந்தா, 18 மாதத்துக்கு பிறகு சென்னைக்கு வந்து, அந்த வீடியோ காட்சி போலியானது என்கிறார். நித்யானந்தாவின் வீடியோ காட்சிகள் உண்மையானதுதான் என கர்நாடக போலீசார் கூறிவிட்டனர். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, குறிப்பிட்ட ஊடகங்கள் மீது மட்டும் புகார் கொடுக்கிறார்.
பெண்களை மையமாக வைத்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்யானந்தா விவகாரத்தில் பெண்ணாக இருக்க கூடிய முதல்வர் கவனமாக கடமையாற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் என்பது, ஒழுக்கக்கேட்டுக்கு துணை போகக் கூடாது.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது விசாரணையை பாதிக்கும் வகையில் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சென்னையில் நித்யானந்தா பேட்டி அளித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல். எனவே, ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலி.பூங்குன்றன் பேசினார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரம் மற்றும் புதுச்சேரியிலும் திராவிடர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1932

No comments:
Post a Comment