பதிவு செய்த நாள் 7/25/2011 14:28:55
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.க. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில், நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை துரித்தப்படத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் உள்ள போது விசாரணையை பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தன்மையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித்தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், மகளிரணி அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டலச் செயலாளர் பழ.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டவுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் திருப்பதி, மாவட்ட செயலாளர் திராவிடமணி, சேலம் மண்டலச் செயலாளர் தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் வனவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி தலைவர் ராஜா நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நித்யானந்தா மீதான வழக்கை விரைந்து முடித்து, தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
http://health.dinakaran.com/District_detail_2011.asp?Nid=756

No comments:
Post a Comment