FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Tuesday, January 29, 2013

Nithyananda plea against Madurai adheenam rejected

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 12:01 [IST]

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

 தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-madurai-court-dismisses-nithyanantha-168788.html


DINAMALAR NEWS

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்யானந்தா மனு தள்ளுபடி
 ஜனவரி 29,2013,00:59 IST

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, முதன்மை சப்கோர்ட் நீதிபதி குருவைய்யா, தள்ளுபடி செய்தார். மதுரை ஆதீனத்தை அரசிடம் ஒப்படைக்கவும், நித்யானந்தா-ஆதீனம் இணைந்து துவக்கிய அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவும், மடத்தின் சொத்துகளை ஆதீனமோ, அவர் தரப்பினரோ வேறு நபருக்கு விற்க, பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும் வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், முதன்மை சப்கோர்ட்டில் மனு செய்தார். நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும், ஆதீன அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கவும் கோரி, ஆதீனம் தரப்பு, அதே கோர்ட்டில் மற்றொரு மனு செய்தது. அறக்கட்டளையை பதிவு செய்த தெற்கு சார்பதிவாளரையும் இணைக்க வலியுறுத்தி, நித்யானந்தா தரப்பு, மனு செய்தது. ஒரே நேரத்தில் தாக்கலான, மூன்று தரப்பினரின் வெவ்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜன.,8ல், நித்யானந்தா தரப்பு புது மனுவை தாக்கல் செய்தது. 
அதில்,"மதுரை ஆதீனத்திற்கு வழக்கு போடும் உரிமை இல்லை. அவர் மனு செய்தது சட்டப்படி செல்லாது. அரசின் முன் அனுமதி பெறாமல் அறக்கட்டளையை களைத்தது, விதிகளுக்கு முரணானது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். இதுதொடர்பாக, நேற்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி குருவைய்யா, பிற மனுக்கள் மீதான விசாரணையை, பிப்., 1 க்கு தள்ளிவைத்தார்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636025

No comments:

Post a Comment