The fraudster guru Nithy, who hid his true birth date and celebrated 1 January as his birth day, celebrated his Happy Birthday this year at Bidadi in great style.
In all these 7 years, only his closest disciples performed the intimate special pada puja on his birthday. For the first time, pushing aside the close disciples, actress Ranjitha performed the first pada puja, announcing her arrival as Numero Uno.
Ranjitha performed the arti ceremony excitedly treating Nithya as God, while Nithy's devotees lapped it all up.
Outside Ranjitha claims that she is not the one in the obscene CD. Inside she is cavorting with Nithy, causing concern to close disciples. In this situation of Ranjitha taking refuge in Nithy's ashram after filing a rape charge against ex disciple LD who tore open Nithy's false mack... We enquired about Ranjitha's sudden charges with DGP Guruprasad of Karnataka CID.
Nithyananda had admitted during our custodial enquiry of his physical relationship with Ranjitha as well as 15 other women as a confession. He also said that he became horny during Full moon and New moon days and needed a woman's body. We have the evidence.
*
Now Ranjitha has charged LD with wrongful behavior when he was in the ashram. After LD left and Nithy Ranjitha CD came out, on June 21, 2010, we interrogated Ranjitha in Chennai. She did not say anything about LD threatening her or torturing her. She also said that she was in contact with Nithyananda and that he ah told her not to talk to media. We knew from all this, based on evidence that Ranjitha and Nithyananda had a close relationship and she did all that Nithyananda asked her to.
Who are the women who Nithyananda related with? When we enquired we found one more famous actress, other than Ranjitha.
A Nithyananda disciple narrated this incident that happened in 2008
In Avadi, Chennai in 2008, a 4 day Nithyanandapurana Meditation Camp was held in an ADMK MP's college campus. After the program was over, Nithya spent the night at Tamilnadu Dhyanapeetam Treasurer Ramanathan's house. Ramanathan has a history. From 2003 till 2008, he exported deity statues through his own company Electralindia. After this Nithy started exports through his brother Nithyeshwar. Afetr the night stay at his house, Ramanathan drove Nithy in his Hundai car, with 2 other cars as back up, to Besant Nagar beach at 8 am.
Nithy usually walked on the beach, enjoying the scene. He talked on his cell phone for 5 minutes laughing often. Then he got into he car saying, let's go, and instead of returning to Ramanathan's house went to another apartment n Besant Nagar.
Usually there will always be a big crowd wherever Nithy went. People would welcome him with poorna kumba int their houses. here there was no one, no reception. The follow up cars stopped outside the gate. Only Ramanathan's car went in. Ramanathan parked the car inside, came out and chatted with the others. They were confused,' where is Swami? He normally does not go alone to anyone's house?'
After 45 minutes Nithy came out bubbling with joy, laughing. No one escorted hm out. Do you know whose house it was? 'Pudunellu Pudunattu' fame actress's house. The disciples who wondered why Nithya was there alone, suddenly remembered..It was a New Moon day!
Another such incident.
In 2009 at Tambaram, Nithy had another program in another college. The organizers stayed usually on site. Here next to Nithy's room, rooms were given to 3famous actresses including Ranjitha.. Of the other two, one was divorced. The other woman's husband had died after they had reunited following a separation. Both were involved in social activities and took part in TV shows.
After the first day class, god knows what experience these two women had, but both left in the morning bidding goodbye to Ranjitha, 'we don't want such a meditation program. we are leaving.' Who knows about other days, but on Full Moon New Moon days, people around him waited nervously how and when the horny Nithy would pounce and on whom..
தனது நிஜப் பிறந்தநாளை மறைத்து... புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1-ந் தேதியையே பிறந்த நாளாகக் கொண்டாடும் வழக்கத் தைக் கொண்ட... சபலச்சாமியார் நித்யானந்தா... இந்த ஜனவரி ஒன்றிலும் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில்... ’ஹேப்பி பர்த்டேவை கோலாகலமாகக் கொண்டாடினார்.
பிறந்த நாள் அன்று நடக்கும் விஷேச பாத பூஜை யின்போது.... நித்தி யின் பிரதான சிஷ்யர்கள் மட்டுமே அவரை நெருங்கிச் சென்று பூஜை பண்ண முடியும். நித்தி ஆன்மீக பிஸ் னஸுக்கு வந்த இந்த 7 ஆண்டு களில்... முதல்முறையாகவும் பகிரங்கமாகவும்... நித்தியின் பிரதான சீடர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு..... தானே முதல் ஆளாக பாதபூஜை செய்து... தான் முதலாவது இடத்துக்கு வந்துவிட்டதை ஆசிரமத் தரப்புக்கு அப் பட்டமாக உணர்த்தியிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.
அதோடு நித்யானந்தாவை கடவுளாகவே பாவித்து... பரபர நிலையில் அவருக்கு ரஞ்சிதா தீப ஆராதனை காட்டி வழிபட... அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நித்தியின் பக்தர்கள் தரிசித்து மகிழ்ந் தார்கள்.
"நித்யானந்தாவோடு ஆபாச சி.டி.யில் இருக்கும் பெண் நானல்ல'’என வெளியே சொல்லிக் கொண்டிருக்கும் ரஞ்சிதாவோடு... எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆசிரமத்தில் ஆனந்தமாய் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறார் நித்தி. இது அவரது நெருங்கிய சிஷ்ய கோடிகளுக்குத்தான் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தி யிருக்கிறது.
நித்தியின் முகத்திரையைக் கிழித்த மாஜிசீடர் லெனின் தர்மானந்தா மீது... பாலியல் புகார் கொடுத்த சூட்டோடு... நித்தியின் ஆசிரமத்திலேயே தஞ்சமடைந்து... பர்சனல் சேவையில் ரஞ்சிதா இறங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில்...
கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி.யான குரு பிரசாத்திடம்... நித்தி- ரஞ்சிதா விவகாரம் குறித்தும் ரஞ்சிதாவின் இந்த குபீர் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நாம் கேட்டோம்.
""நாங்கள் நித்யானந்தாவை கஸ்டடியில் வைத்து விசாரித்த போதே... நடிகை ரஞ்சிதாவோடு தனக்கு ஒரு வருடமாக உடல்ரீதி யான தொடர்பு இருப்பதாக ஒத்துக்கொண்ட நித்யானந்தா... மேலும் 15 பெண்களுடன் தனக்கு சரீர பந்தம் இருந்த தையும் வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார். அதோடு தனக்கு அமாவாசை, பௌர்ணமி.. போன்ற நாட்களில் ஏற்படும் உடல் எழுச்சியைத் தணிக்க... கண்டிப்பாக பெண்சரீரம் தேவைப்படும் என்றும் கூச்சமில்லாமல் நித்யானந்தா சொல்லி யிருக்கிறார். இந்த ஆதாரமெல்லாம் எங்களிடம் பத்திரமாக இருக்கிறது.
இன்னொன்று... லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்த காலகட்டத்தில்.. தன்னிடம் தப்பாக நடக்க முயன்றதாக ரஞ்சிதா இப்போது திடீரென குற்றம் சாட்டியிருக்கிறார். லெனின் தர்மானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறி... நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான சி.டி.யை. வெளியிட்டபிறகு... 2010 ஜூன் 21-ல் சென்னையில் வைத்து நாங்கள் ரஞ்சிதாவை விசாரித்தோம். அப்போது அவர் லெனின் தர்மானந்தா தன்னை மிரட்டியதாகவோ... தனக்கு டார்ச்சர் கொடுத்த தாகவோ எங்களிடம் சொல்லவே இல்லை. அதே சமயம்... நித்யானந்தா என்னோடு பேசிக்கொண்டு தொடர்பில்தான் இருக்கிறார் என்றும்.... மீடியாக்களிடம் பேசவேண்டாம் என்று அவர் தன்னை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் எங்களிடம் ரஞ்சிதா தெரிவித்தார். ஆக நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருப்பதையும்... நித்யானந்தா சொல்வதையெல்லாம் அப்படியே கேட்பவராக ரஞ்சிதா இருப்பதையும் நாங்கள் ஆதாரப் பூர்வமாகத் தெரிந்துகொண்டோம்''’என்று முடித்துக் கொண்டார்.
நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்? என நாம் அவரது தரப்பிலேயே துருவியபோது... ரஞ்சிதா தவிர மற்றொரு பிரபல நடிகையும் அந்தப் பட்டியலில் இருப்பது தெரிய வந்தது. அவர் யார்?
நித்தியின் சீடர் ஒருவரே 2008-ல் நடந்த அந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார். அதன்படி...
2008-ல், சென்னை ஆவடியில் இருக்கும்.. அ.தி.மு.க. எம்.பி. ஒருவருக்குச் சொந்தமான கல்லூரியில் ‘நித்யானந்த பூரண முகாம்’ என்ற பெயரில் 4 நாள் தியான வகுப்பு நடந்தது. நான்கு நாள் வகுப்பும் நிறைவடைந்ததும்... கடைசி நாள் இரவு... தமிழக தியான பீட பொருளாளர் ராமநாதன் வீட்டில் நித்தி தங்கினார்.
இந்த ராமநாதனுக்கு ஒரு மினி சைஸ் வரலாறு உண்டு. அதாவது 2003-ல் இருந்து 2007-வரை தன்னுடைய எலக்ட்ரால் இண்டியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி மூலம்தான் வெளிநாடுகளுக்கு கடவுள் சிலைகளை ஏற்றுமதி செய்துவந்தார் ராமநாதன். அதற்குப் பிறகு ‘நித்யானந்தாவே தன் தம்பியான நித்தேஸ்வ ரானந்தா மேற்பார்வையில் ஏற்றுமதியைத் தொடங்கினார்.
இது ஒருபுறமிருக்கட்டும். ராமநாதன் வீட்டில் இரவு தங்கிய நித்தி... அந்தக் காலை நேரத்தில் அங்கிருந்து ஹூண்டாய் அக்காய் காரில் கிளம்பினார். அந்தக் காரை ஓட்டியவர் ராமநாதன். இந்தக் காருக்குப் பாதுகாப்பாக 2 கார்கள் அதன் பின்னால் சென்றன. அந்தக் கார் சரியாக காலை 8 மணிக்கு பெசன்ட் நகர் பீச்சை அடைந்தது.
பீச்சில் வாக்கிங் போவதும்... கடலின் அழகை ரசிப்பதும் நித்திக்கு சுகமான விசயங்கள். அங்கு காரில் இருந்து இறங்கிய நித்தி... தன் செல்போனில் 5 நிமிடம் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டே நடந்தார். பின்பு உற்சாகமாக..’வாங்க போகலாம்’ என எல்லோரையும் பார்த்துச்சொல்லிவிட்டு.. தான் வந்த காரிலேயே ஏறினார். அங்கிருந்து கிளம்பிய கார் மறுபடியும் ராமநாதன் வீட்டுக்குப் போக வில்லை. அதே பெசன்ட் நகர் பகுதியில் இருக்கும்... ஒரு அபார்ட்மெண்ட்டுக்குப் போய் நின்றது.
பொதுவாக நித்யானந்தா யார் வீட்டுக்குப்போனாலும் அங்கு ஒரு பெரிய கூட்டம் திரட்டப்பட்டிருக்கும். பூரணகும்ப மரியாதை கொடுத்துதான் வீட்டுக்குள் நித்தியை அழைப்பார்கள். ஆனால் இங்கு இப்படி எதுவும் நடக்கவில்லை.
பின்னால் வந்த இரண்டு காரையும் கேட்டுக்கு வெளியே நிறுத்திக்கொள்ளச் சொல்லிவிட்டு... அவரது கார் மட்டும் கேட்டுக்குள் நுழைந்தது. ராமநாதன் உள்ளே காரை நிறுத்திவிட்டு... உட னடியாக வெளியே வந்து மற்றவர் களுடன் பேசிக்கொண்டிருந்தார். "சாமி எங்கே? அவர் தனியா எந்த வீட்டுக்கும் போகமாட்டாரே? யாரைப் பார்க்கப் போயிருக்கார்?'’ என சக சீடர்கள் குழம்பினர்.
ஒரு முக்கால் மணி நேரம் கழித்து... நித்யானந்தா சிரித்தபடியே பூரிப்பாக வந்தார். அவரை கார்வரை வழியனுப்பக் கூட அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
அந்த வீடு யார் வீடு தெரியுமா?
"புதுநெல்லு புதுநாத்து' கண்ட பிரபல நடிகையின் வீடு. நித்தி அந்த வீட்டுக்கு ஏன் போனார் என்று யோசித்த அவரது பிரதான சீடர்களுக்கு... அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது; அன்று அமாவாசை!
இதேபோல் இன்னொரு சம்பவம்.
2009 -ஜூனில் தாம்பரம் அருகே இருந்த ஒரு கல்லூரியில் தியான வகுப்பை நடத்தினார் நித்தி. பொதுவாக இந்த வகுப்புகள் நடக்கும் இடத்திலேயே... பயிற்சியாளர்கள் தங்கியிருப்பார்கள். இங்கு நித்தி தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறை... நடிகை ரஞ்சிதா உள்ளிட்ட மூன்று பிர பல நடிகைகளுக்கு ஒதுக் கப்பட்டிருந்தது.
ரஞ்சிதா அல்லாத அந்த இருவரில் ஒருவர் கணவரை விவாகரத்து பண்ணியவர். இன் னொருவரோ... பிரிந்த கணவரை சேர்ந்த நேரத்தில்... அவரை காலனிடம் பறிகொடுத்தவர். இந்த இரண்டு நடிகைகளுமே தங்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்திக்கொண்டி ருப்பதோடு.. சேனல்களிலும் தலைகாட்டு பவர்கள்.
முதல் நாள் தியான வகுப்பு முடிந்து அறையில் தங்கிய இந்த இரண்டு நடிகை களுக்கும் என்ன அதிர்ச்சி அனுபவமோ தெரியவில்லை... மறுநாள் காலை... ரஞ்சிதாவிடம் "எங்களுக்கு இப்படி ஒரு தியான கிளாஸே வேண்டாம். நாங்கள் வருகிறோம்'’ என குட்பை சொல்லி விட்டுக் கிளம்பிவிட் டார்கள்.
மற்றநாட்களில் எப்படியோ... ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி நாட்களிலும்... முறுக்கேறி நிற்கும் நித்தியைப் பார்த்து... . மிரட்சியில் கைபிசைவார்கள்... எந்த நேரத்தில் வேட்டை மிருகம் பாயுமோ என்று.
Source: Nakkeeran
No comments:
Post a Comment