Counterattack by Lenin Dharmananda
நடிகை ரஞ்சிதாவுடனான சி.டி.யை வெளியிட்டு... நித்யானந்தாவின் ஆன்மிக முகத்திரையைக் கிழித்து பலத்த பரபரப்பை ஏற்படுத்தியவர்... நித்தியின் மாஜி சீடர் லெனின் தர்மானந்தா. இதனால் நித்திக்கு சிறைச்சாலை யோகம் கிடைக்க... நடிகை ரஞ்சிதாவோ போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவானார்.
Lenin Dharmananda, former disciple of Nithyananda, tore open the spiritual facade of Nithyananda by exposing his CD with Actress Ranjitha. Nithyananda went to jail and Ranjitha went underground fearing Police action.
இந்த நிலையில்... திடுதிப்பென கடந்த 31-ந் தேதி பெங்களூர் ராம்நகர் கோர்ட்டில் ஆஜரான நடிகை ரஞ்சிதா... ‘தன்னை லெனின் தர்மானந்தா கற்பழிக்க முயன்றார்’ என்று அதிரடிப் புகாரைக் கொடுக்க.. இதே சூட்டோடு.. பிடதி தலைமை ஆசிரமத்தில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தியின் சீடரான சுப்ரியானந்தாவும் இதே ரீதியில் புகாரைக் கொடுத்து தங்கள் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களின் அதிரடிப் புகார் கள் குறித்து நாம் அந்த லெனின் தர்மானந்தாவையே சர்ச் சைக்குரிய கேள்விகளோடு சந்தித்தோம். அப்போது...
Now..suddenly Ranjitha appeared on 31 January in Bangalore Ramnagaram court, complianing that Lenin Dharmananda tried to rape her. As if in collusion, Nithy's disciple and ashramite from Bidadi Headquarters, Supriya from Tamilnadu, also complained in the same manner to deflect attention. We met Lenin Dharmananda and asked about these complaints.
நக்கீரன் : நடிகை ரஞ்சிதா திடீரென வெளியே வந்து உங்கள் தலையை உருட்ட ஆரம்பித்திருக் கிறாரே... ஏன்?
Nakkiran: Why has actress Ranjitha surfaced now suddenly and making trouble for you?
லெனின் தர்மானந்தா : இவர்களைப் போன்றவர்களால் என் தலையை உருட்ட முடியாது. நித்யானந்தாவுக்கு எதிராக 430 பக்கக் குற்றப்பத்திரிகையை சி.ஐ.டி.போலீஸ் கர்நாடக கோர்ட்டில் தாக்கல் பண்ணி விட்டது. ரஞ்சிதாவுடனான சி.டி. மார்ஃபிங் செய்யப்பட்ட போலி சி.டி. என பொய்க்குரல் கொடுத்துக் கொண்டிருந்த நித்திக்கு.. நெற்றியடி கொடுக்கும் விதத்தில்... அந்த ஆபாச சி.டி. உண்மையானது என்றும்... அதில் படுக்கையில் இருப்பவர்கள் நித்தியும் ரஞ்சிதாவும்தான் என்றும்... டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வுக்கூடம் உறுதிசெய்து தந்த ரிப்போர்ட்டும் அந்தக் குற்றப்பத்திரிகை யோடு இணைக்கப்பட்டிருக் கிறது. அதோடு பெண்களுடன் செக்ஸ் மற்றும் ஆண்களுடன் ஹோ மோசெக்ஸ் என்கிற நித்தி மீதான பிரதான குற்றச்சாட்டும் நிரூபணம் ஆகிற அளவிற்கு வலுவான எவிடன் ஸுகள் குற்றப்பத்திரிகையில் இருக்கிறது. எனவே இந்த வழக்கின் போக்கை திசைதிருப்பும் நோக்கத் தில்... நித்தியும் ரஞ்சிதாவும் கூடிப்பேசி... எனக்கு எதிராக இப்படியொரு ஆபாசப் புகார் டிராமாவை நடத்தத் தயாராகிவிட்டார்கள். இதற் காகத்தான் தலைமறைவாக இருந்த ரஞ்சிதா நித்யானந் தாவால் வெளியே வர வழைக்கப்பட்டிருக்கிறார்.
Lenin Dharmananda: These people cannot trouble me. A 430 page charge sheet has been filed by the Police CID in Karnataka Court.The charge sheet contains the official Forensic laboratory Report from Delhi and Hyderabad that the CD, which Nithy claimed was false, is indeed genuine and features both Nithy and Ranjitha in bed, nailing Nithy. The charges sheet has strong evidence to show that Nithy has indulged in sexual acts with women and homosexual acts with men. Now that the case is going against Nithy, Nithy and Ranjitha have conspired to damage my credibility through these obscene complaints. Ranjitha has come out of hiding only for this.
நக்கீரன் : ரஞ்சிதா இத்தனை நாள் தலைமறைவு நாடகமாடி போக்குக்காட்ட என்ன காரணம்?
N: Why was Ranjitha underground for so long and carrying out this drama?
லெனின் தர்மானந்தா : ரஞ்சிதாவின் வாயைப் போலீஸ் திறக்க வைத்துவிட்டால்... தன்னால் தப்ப வே முடியாது என்பதால்... அவரை பதுங்கியிருக்கும்படி பார்த்துக் கொண்டார் நித்தி. இதற்காக பல கோடிகள் வரை கைமாறியதாக எனக்குத் தகவல். இப்போது நெருக் கடி முற்றிவிட்டதால் ரஞ்சிதாவை தன்னிடம் அழைத்துக்கொண்டிருக் கிறார். 31-ந் தேதி மடத்தில் நித்தி யுடன் நீண்ட நேரம் ரஞ்சிதா பேசிக் கொண்டிருந்ததாக ஊடக நண்பர் கள் மூலம் தகவலைத் தெரிந்து கொண்டேன். மீண்டும் நித்தி ஜோதியில் ரஞ்சிதா ஐக்கியம். அவ்வளவுதான்.
LD: Nithy hid Ranjitha knowing that if she opened her mouth to the Police, he will be in deep trouble. I understand reliably that crores of rupees changed hands for this purpose. Now that he is in a mess, Nithy has brought her out. i found from friends that Nithy had long discussions with Ranjitha at Bidadi on 31 January. Ranjitha has merged into Nithy light, that's all...
நக்கீரன் : ரஞ்சிதாவை நீங்கள் கற்பழிக்க முயன்றீர்கள் என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக் கிறாரே?
N: Ranjitha has strongly claimed that you have raped her?
லெனின் தர்மானந்தா : நான் ரஞ்சிதாவைக் கற்பழிக்க முயன்றிருந்தால் அவர் உடலில் காயங்கள் இருக்குமல்லவா? இத்தனை நாள் தலைமறைவாக இருந்துவிட்டு இப்போது அவர் இப்படியொரு புகார் கொடுத்திருக்கிறார் என்றால்... காயங்கள் பலமாக(!) இருந்திருக்கும் போலிருக்கிறது. நான் தவறு செய்யவில்லை. எந்த மருத்துவ சோதனைக்கும் உட்பட நான் ரெடி. அவர், மருத்துவ சோதனைகளுக்கு ரெடியா? நான் சவால் விடுகிறேன். அட்டம்ப்ட் ரேப்புக்கான காயங்களையும் தடயங் களையும் ரஞ்சிதா நிரூபிக்கத் தயாரா? ஒரு உண்மையைச் சொல் கிறேன். தனக்கு நெருக்கமான பெண்களோடு மற்றவர்களைப் பேசவே அனுமதிக்கமாட்டார் நித்தி. அவரைத் தவிர அவர் அனுமதியில்லாமல் யாரும் யாரையும் தனிமையில் சந்திக்கவே முடியாது. கேமராக் கண்கள் எல்லா இடங்களிலும் விழித்துக் கொண்டிருக்கும். அப்படியிருக்க... எப்படி அங்கே கற்பழிப்பு முயற்சி நடக்கும்?
LD: If i had tried to rape her, she would have had serious injuries. Was she hiding so long to get over these injuries? I have not done anything wrong. I am wiling to undergo any medical test. is she ready? I challenge her. Let her prove injuries due to rape. Let me tell you a truth. Nithy will never allow women close to him to even talk to others. No one can meet them alone without his permission. There are cameras everywhere watching. How can any rape attempt work?
நக்கீரன் : ரஞ்சிதாவிடம் 2 கோடி கேட்டு நீங்கள் மிரட்டியதாவது உண்மையா?
லெனின் தர்மானந்தா : ஆசிரமத்திலும் கூட பலகோடிகளைக் கையில் வைத்திருக்கும் சீமாட்டியா அவர்? நித்யானந்தாவுக்குத் தேவையான விசயங்கள் மட்டும்தான் அவரிடம் இருந்தது. என்மீதான பண மிரட்டல் புகாரும் பொய்ப் புகார்தான்.
LD: What is she, an heiress, to have so many crores in the ashram? She onl has what Nithyananda needed. This allegation of money demand is a false claim.
நக்கீரன் : அந்த சி.டி.யில் நித்யானந்தாவோடு இருப்பது நானில்லை என்று ரஞ்சிதா மறுத்திருக்கிறாரே?
N: Ranjitha has refuted that she is he one in the CD with Nithyananda.
LD: Is she saying hat the woman with Nithyananda is another woman? Nithyananda himself admitted to Police during enquiry that he had sex many times with Ranjitha. he also admitted to having physical relationship with more than 15 women. I have secure proof of his telephone conversation with me pleading, ' I am an adult (Major). Ranjitha is also an adult. What is wrong if we had sex?'
நக்கீரன் : உங்கள் மீது புகார் கொடுத்திருக்கும் மற்றொரு பெண்ணான சுப்ரியா யார்?
N: Who is the other women Supriya, who has complained against you
லெனின் தர்மானந்தா : எனக்கு ரெண்டு மாதங்களுக்கு முன்னதாக... 2006-ல் நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்த பெண் சந்நியாசினி அவர். ஆசிரமத்தில் தமிழ் பப்ளிகேஷன் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தவர். இந்த சுப்ரியானந்தாவுக்கும் நித்திக்கும் எவ்வளவு நெருக்கம் என்பது ஆசிரமத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். நித்தியின் அறைக்கு எந்த நேரத்திலும் சென்று பர்சனல் சேவை செய்யும் பத்துப் பெண் களில் முதல் இரண்டு, மூன்று இடங்களில் இருந்தவர் இவர். ஆசிரம அலுவல்கள் தொடர்பாக இயல்பாக மற்றவர்களைப்போல் இவரைச் சந்தித்துப் பேசியிருக் கிறேன்.
LD: She is a sanyasini (female monk) who joined the Nithyananda ashram a few months ahead of me, in 2006. She worked in Tamil Publications. Everyone in the ashram knew how close she was to Nithy. She was amongst the top 2 or 3 women, out of about 10, who did personal duties for Nithy. I met her only for ashram related work.
நக்கீரன் : அவரது முகத்தில் மயக்க ஸ்பிரேவைத் தெளித்து நினைவிழக்கச்செய்து... அவரை உங்கள் செல்போன் மூலம் நீங்கள் ஆபாசப் படம் எடுத்ததாகவும்... அந்த சமயத்தில் யாரோ அங்கு வந்ததால் அந்தப்பெண் தப்பித்ததாகவும்... இந்தப் படத்தைக் காட்டியே நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்று நீங்கள் மிரட்டியதாகவும் சுப்ரியானந்தா புகார் சொல்லியிருக் கிறாரே?
N: She has complained that you sprayed something to make her unconscious, you took obscene pictures of her on your cell phone and she escaped because someone happened to come there and that you had threatened her not to disclose any of all this..
லெனின் தர்மானந்தா : 2009-ஜூன், ஜூலையில் இது நடந்ததா அவங்க சொல்றாங்க. நித்தியின் பர்சனல் சேவகிகளில் நம்பர் 2-ஆம் இடத்தில் இருந்த சுப்ரியா என்னைக் கண்டு பயப்படத் தேவையுண்டா? அப்படி நடந் திருந்தா ஆன்மிக ஜாம்பவானான நித்திதான் என்னை விட்டு வச்சி ருப்பாரா? ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடந்ததா இப்ப சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன? தனக்கு நெருக்கமான பெண்களை... தனக்கு அடிமையா மூளைச்சலவை மூலம் மாற்றக்கூடியவர் நித்தி. அவர் ஏவிவிட்ட மனித வெடிகுண்டு போல யார் மீது வேணும்னாலும் இப்படிப்பட்ட பெண்கள் பொய்ப் புகாரோடு பாய்வாங்க. இவங்கள்லாம் பரிதாபத்துக்குரிய நித்தியின் கைப்பாவைகள்.
LD: She has said this all happened in June, July 2009. Being number 2 of Nithy's personal caretaker, would she be afraid of me? Had this happened, would the spiritual veteran Nithy let me live? What is her compulsion to say this now after a year and a half? Nithy has brain washed every woman around him to a salve. Like a human bomb, he sends them with complaints against any one. There are pitiable puppets of Nithy..
நக்கீரன் : இந்த டிசம்பர் 30-ந் தேதி பிடதி பஸ் ஸ்டாண்டில் வச்சி... அவருக்கு நீங்கள் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் சுப்ரியா சொல்றாங் களே?
N: She said that you threatened her on 30 December 2010 at Bidadi bus stand?
லெனின் தர்மானந்தா : டிசம்பர் 30-ல் மட்டுமல்ல... அதுக்கு முன் கடந்த 15 நாட்களாகவும் நான் சென்னையில்தான் இருந்தேன். இதை சி.பி.ஐ. மட்டுமல்ல; இண்டர்போல் போலீஸ் வேணும்னாலும் வந்து விசாரிக்கட்டும்.
Not only n 30 December, 2010, for 15 days before that also i was in Chennai. CID, or even Interpol can verify his
இது ஹைடெக்னாலஜி உலகம் என்பதை நித்தி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருத்தர் யூஸ் பண்ணும் செல்போன்களை வச்சே அவர் குறிப்பிட்ட நாளில் எந்தப் பகுதியில் இருந்தார் என்பதை கண்டுபிடிக்கக் கூடிய அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியாச்சு. அன்று சென்னையில் நான் இருந்ததற்கும்... அன்று யார், யாருடன் தொடர்பு கொண்டேன்.... யார், யாரை சந்திச்சேன் என்பதற்கும் ஆதாரம் இருக்கு. இதில் புகுந்து நித்தி சித்து விளையாட முடியாது. பாவம்... நித்தியின் விளையாட்டெல்லாம் அப்பாவி பெண்கள்ட்ட மட்டும்தான் எடுபடும்.
Nithy does not know that this is high tech world. From one's cell phone it can be found out scientifically where a person was at a given date. There is evidence forw here i wa sin Chennai, who i spoke to and who i met. Nithy cannot lay with these facts. Poor man, he can only play with innocent women.
நக்கீரன் : இன்னும் இரண்டு சாமியாரினிப் பெண்களை நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்து... அந்தப் படத்தைக் காட்டித்தான் ரஞ்சிதாவையும் சுப்ரியாவையும் நீங்கள் கெடுக்க முயன்றீர்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களே?.
N: Ranjitha and Supriya have said hat you used pictures of sexually assaulting two other sanyasi women to forcibly rape them?
லெனின் தர்மானந்தா : மேலும் இரண்டு பெண்களைக் கொண்டு நித்தி எனக்கெதிரா வழக்குகளைத் தயார் பண்ணிக்கிட்டு இருக்கார் என்பதையே இது காட்டுது. நான் இப்படி ஆசிரமத்தில் பெண்களிடம் புகுந்து விளையாடினேன் என்பது உண்மையானால்... கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் நித்தியின் ’ஞானக்கண்களுக்கு அது எப்படி தெரியாமல் போனது? அதுசரி.. அவரால் அவர் பெட்ரூமில் வைக்கப்பட்டிருந்த கேமராவையே கண்டுபிடிக்க முடியாதபடி அவரது கண்களை காமம் மறைக்கும் போது.. அவர் என்ன பண்ணுவார் பாவம். இப்போதும் சொல்கிறேன்.... இவர் இன்னும் எத்தனை பொய்ப் புகார்களை எனக்கு எதிராகப் புனைந்தாலும்... அவற்றை சட்டத்தையும் சத்தியத்தையும் நம்பி சந்திப்பேன்.
LD: this just shows that Nithy is preparing 2 more women to file cases against me. If i had indeed played with women in the ashram, how come Nithy, who claims to be God, with his super sight did not know/ Ok. He could not even find out about the camera in his own bedroom. What could he do? However many false claims he makes against me, i trust in law and truth to face him.
நக்கீரன் : நித்தி ஆசிரமத்துக்கு ரஞ்சிதா போய்விட்டதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொண் டாலும் ஆச்சரியமில்லை என்றும் சொல்லப் படுகிறதே?
N: It is said that Ranjitha has gone to Nithy's ashram and it may not be surprising of they marry soon?
லெனின் தர்மானந்தா : நித்யா னந்தா, நானே கடவுள் என்று எங்களை நம்ப வைத்தவர். பெண்ணாசையே கூடாது என்பவர். நான் முற்றும் துறந்த ஞானி என்பவர். இதனால்தான் ஆயி ரக்கணக்கில் பக்தர்கள் அவரை வணங்கினார்கள். இவர் ரஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டு குழந்தை களைப் பெற்றுக்கொண்டு ஊருக்குள் வந்தால் இவரை யார் கேட்கப்போகிறார்கள். தடுக்கப் போகிறார்கள்?
LD: Nithyananda made us believe he was God. He warned against lust. He said he was a pure sanyasi without desires. This is why thousands of people worshipped him. If he marries Ranjitha and has children, who is going to stop him? who is bothered?
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8117
No comments:
Post a Comment